இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனையாகும் ஸ்மார்ட் டிவிக்களில் ரெட்மி டிவிக்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சாமசங், எல்ஜி, ஒன்பிளஸ் உள்ளிட்ட டிவிக்களுக்கு இணையாக ரெட்மி டிவிக்களையும் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகிறார்கள். அதனால் பட்ஜெட் விலையில் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்ய ரெட்மி நிறுவனம் தயாராகிவிட்டது.
ரெட்மி அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட் டிவிகள் 4கே டிஸ்பிளே மற்றும் எச்டிஆர்10/எச்எல்ஜி ஆப்சன்களுடன் வெளிவர உள்ளன. இதனால் இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் Fire OS 7 உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
பின்பு இந்த டிவிகளில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அறிமுகமாக உள்ள ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன. அதோடு, குவாட்-கோர் பிராசஸர் உடன் Mali-G52 GPU ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் பெசல்-லெஸ் டிசைன் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகளில் டால்பி ஆடியோவுடன் கூடிய தரமான ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் புளூடூத் வி5.0, வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆப்சன்களையும் கொண்டுள்ளன இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள். இதனால், இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட் டிவிகள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.10,999-விலையில் வாங்க முடியும். இந்த 32-இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டில் வெளிவந்துள்ளது. 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி.
32-இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி மாடலில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் உள்ளது. மேலும் டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் ரெட்மி டிவி.