முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

ஆப்பிள் ஐ போன் 14 புரோ மேக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்சி எஸ் 23 அல்ட்ரா போன்களுக்கு இணையான கேமராவுடன் ரியல்மி 11புரோ பிளஸ் வெளிவருகிறது.

 • 15

  வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

  தனது வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் விருப்பத்திற்கேற்ற வகையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது ரியல் மி நிறுவனம். அந்த வகையில் மே மாதம் அசத்திலான புதிய மாடல் போன் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது ரியல் மி நிறுவனம். ரியல்மி 11 புரோ பிளஸ் என்ற பெயரில் மே 19 ஆம் தேதி அறிமுகமாக உள்ள புதிய போன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 25

  வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

  இதுவரையில் கேமரா என்றாலே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 புரோ மேக்ஸ் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ஆகிய இரண்டு மட்டும் தான் நம் நினைவிற்கு வரும். இந்த இரண்டு போன்களுக்கும் சவால் விடும் வகையில் ரியல்மி 11 புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா போனில் உள்ள ஸ்பேஸ் ஜூம் அம்சத்தை போலவே, ரியல்மி 11 புரோ பிளஸ் போனில் மூன் மோட் கொடுக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

  இந்த மோடை பயன்படுத்தி ரியல்மி 11 புரோ பிளஸ் கேமரா மூலம் நிலவை ஜூம் செய்து தரமான போட்டோவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ்-ல் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. இதற்காக 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மீடியாடெக் டைமென்சிட்டி 1200 எம்டி6893 சிப்செட் இந்த போனில் உள்ளது. அதே போல 200 எம்பி மெயின் கேமரா டிரிபிள்-கேமரா செட்-அப் உடன் அறிமுகமாக உள்ளது ரியல் மி 11 புரோ பிளஸ்.

  MORE
  GALLERIES

 • 45

  வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

  அதில் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 எம்பி லென்ஸ் கேமரா அடங்கும். இந்த புதிய போனில் ஸ்பேஸ் ஜூம் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சமே ரியல்மி 11 புரோ பிளஸ் போனின் ஆகச்சிறந்த அம்சம் என்று கூறலாம். அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த புதிய போனில் உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வழங்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  வேற லெவல் கேமரா...போட்டோ கிளாரிட்டி அள்ளும்.. ரியல்மியின் சூப்பர் போன்...

  இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் விலை ரூ. 34,990 ஆக இருக்க வாய்ப்புள்ளது. கருப்பு மற்றும் கோல்டு ஆகிய இரண்டு வண்ணங்களில் கலர்களில் இந்த போன் கிடைக்க உள்ளது. மற்ற புரோ மாடல் போன்கள் ரூ.60,000 மற்றும் ரூ.70,000 என விற்கப்படும் நிலையில் 30,000 ரூபாய் விலையில் வெளியாக உள்ளதால் ரியல் மி புரோ 11 பிளஸ் விற்பனையில் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES