முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

Real Me, Xiaomi, One Plus Smartphones : இந்த வாரம் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட் போன்களின் முழு விவரம் இதோ..

  • 16

    இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

    பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நம் நாட்டில் அடுத்தடுத்து பல டிவைஸ்களை அறிமுகப்படுத்த உள்ளன. OnePlus, Xaiomi மற்றும் Realme போன்ற முக்கிய சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்ஸ் மற்றும் TWS (True Wireless Stereo) இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் வாங்க திட்டமிட்டு இருந்தால் அடுத்து வரும் நாட்களில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாக உள்ள முக்கிய டிவைஸ்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

    ஏப்ரல் 25: ஏப்ரல் 25ம் தேதி 2 மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரியல்மி நிறுவனம் கேமிங்கை மையமாக கொண்ட அதன் Realme Narzo 50A Prime மொபைலை அறிமுகப்படுத்துகிறது. மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Moto G52 மொபைலை அறிமுகப்படுத்துகிறது. இதில் Narzo 50A Prime மொபைல் 6.6-இன்ச் ஃபுல் -HD+ திரை மற்றும் 50-மெகாபிக்சல் ட்ரிபிள் கேமராக்களை கொண்டிருக்கும். இதில் 5,000mAh பேட்டரி உள்ளது. அதே போல Moto G52 மொபைலானது 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 5,000mAh பேட்டரியுடன் வரும்.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

    ஏப்ரல் 26:ஏப்ரல் 26  ஆம் தேதி Poco F4 GT கேமிங் மொபைல் மற்றும் முதல் Poco வாட்ச் என்னும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2 டிவைஸ்களும் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றாலும் இவை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .Poco F4 GT கேமிங் மொபைலானது சீனாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள Redmi K50 கேமிங் மொபைலை ஒத்ததாக இருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இதில் Qualcomm-ன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 Gen 1 SoC ப்ராசஸர் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

    ஏப்ரல் 27:ஏப்ரல் 27ம் தேதி Xiaomi நிறுவனம் Snapdragon 8 Gen 1 ப்ராசஸரில் இயங்கும் அதன் Xiaomi 12 Pro மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஃபோன் ட்ரிபிள் 50 மெகாபிக்சல் கேமராக்களை கொண்ட முதல் ஆண்ட்ராய்டு டிவைஸ் ஆகும். இதை தவிர Xiaomi Pad 5 டேப்லெட் மற்றும் இது சூப்பர் ஸ்லிம் பெசல்களுடன் கூடிய Xiaomi Smart TV 5A உள்ளிட்ட டிவைஸ்களையும் வரும் ஏப்ரல் 27ல் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது Xiaomi.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

    ஏப்ரல் 28: வரும் ஏப்ரல் 28ம் தேதி OnePlus நிறுவனம் 2 மொபைல்கள் மற்றும் ஒரு TWS இயர்பட்ஸ் தயாரிப்பு என 3 பொருட்களை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. காஸ்டலியான OnePlus 10R மற்றும் பட்ஜெட் மொபைலான OnePlus Nord CE 2 Lite 5G ஆகிய 2 மொபைல்களை வெளியிட உள்ளது. தவிர OnePlus Nord Buds எனப்படும் புதிய TWS இயர்பட்ஸை அறிமுகப்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் OnePlus-ன் மலிவு விலை Nord சீரிஸில் முதன்மையானதாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவில் வெளியாக இருக்கும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்..

    ஏப்ரல் 29: ஏப்ரல் 29 வரும் வெள்ளியன்று பல தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தவுள்ளது Realme. நிறுவனம் அதன் Realme Pad டேப்லெட்டின் மினி வெர்ஷனை வெளியிடுகிறது. இது Realme Pad Mini என்று அழைக்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் டிவைஸான Realme GT Neo 3 மற்றும் Realme Q2s இயர்பட்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளையும் ஏப்ரல் 29ல் அறிமுகப்படுத்துகிறது Realme.

    MORE
    GALLERIES