முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

Raksha Bandhan 2022 | தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் ரக்‌ஷா பந்தனுக்கு பரிசளிக்க கூடிய அசத்தலான கேஜெட்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம் வாங்க...

  • 16

    ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

    சகோதரன் மற்றும் சகோதரி இடையிலான பாசத்தை பறைசாற்றும் விதமாக இந்தியாவில் ரக்‌ஷா பந்தன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் தங்களது சகோதரன்களின் கைகளில் ராக்கி என்ற புனித நூலை சகோதரிகள் கட்டுவார்கள், அதனை ஏற்றுக்கொண்ட அண்ணன் மற்றும் தம்பிமார்கள் சகோதரிகளுக்கு பணம் அல்லது பரிசு பொருட்களை கொடுக்க வேண்டும். தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் பரிசளிக்க கூடிய அசத்தலான கேஜெட்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க...

    MORE
    GALLERIES

  • 26

    ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

    இன்ஸ்டாக்ஸ் மொமென்ட்ஸ் பாக்ஸ் (ரூ.6,498): உங்கள் சகோதரி எப்போதுமே செல்ஃபி பிரியராக இருப்பவராக இருந்தால், இன்ஸ்டாக்ஸ் மொமென்ட்ஸ் பாக்ஸ் ஒரு சிறப்பான கிப்ட்டாக இருக்கும். மினி 11 கேமராவைக் கொண்ட இதில், செல்ஃபி மோட் மற்றும் ஆட்டோ எக்ஸ்போஷரின் போன்ற ஸ்பெஷல் பியூச்சர்கள் உள்ளன. ராக்கி கட்ட வரும் சகோதரிக்கு இதை பரிசாக கொடுத்து, ரக்‌ஷா பந்தன் நினைவுகளை அழகு அழகான போட்டோக்களாக மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாத நினைவாக மாற்றக்கூடிய சிறந்த பரிசாக இது இருக்கும். இன்ஸ்டாக்ஸ் மொமென்ட்ஸ் பாக்ஸில், 1 இன்ஸ்டாக்ஸ் மினி 11 கேமரா இன்ஸ்டாக்ஸ் மினி ஃபிலிம்களின் 1 பேக் (20 ஷாட்கள்) 1 பாக்கெட் ஃப்ரிட்ஜ் காந்தங்கள் (ஒரு பேக்கிற்கு 5) பன்டிங், பேட்டரிகள் மற்றும் ஒரு பயனர் கையேடு ஆகியவை இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

    Noise i1 ஸ்மார்ட் கிளாஸ் (ரூ.5,999): உங்க தங்கச்சி செம்ம ஸ்டைலிஷ் ப்ளஸ் பேஷன் ரசிகையாக இருந்தால் அவருடைய தோற்றைத்தை மேலும் கூலாக்க Noise i1 ஸ்மார்ட் கிளாஸ் கைகொடுக்கும். Noise நிறுவனம் Noise i1 Smart Glass என்ற இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் மற்றும் பேஷன் விரும்பிகளுக்காக வடிவமைக்கபட்டுள்ள இது, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாப்பதோடு, ஸ்மார்ட் போனில் இருக்கூடிய பல வசதிகளையும் கொண்டுள்ளது. மேக்னெடிக் சார்ஜிங், மல்டிஃபங்க்ஸ்னல் டச் கன்ட்ரோல், வாட்டர் ப்ரூஃப் , புற ஊதாக்கதிர் வீச்சை தடுக்கும் பிளிட்ரேஷன் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியின் விலை ரூ.5,999 ஆகும்.

    MORE
    GALLERIES

  • 46

    ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

    எலிஸ்டா ELS ST 8000 - AUFB சிங்கிள் டவர் ஸ்பீக்கர் (ரூ.7,199): மியூசிக் லவ்வர்ஸுக்கு ஏற்ற சிறப்பான கிப்ட் என்றால் அது பட்ஜெட் விலையில் கிடைக்க கூடிய எலிஸ்டா ELS ST 8000 - AUFB சிங்கிள் டவர் ஸ்பீக்கராக தான் இருக்க முடியும். ஸ்மார்ட் டி.வியுடன் கனெக்ட் செய்யக்கூடிய இந்த ஸ்பீக்கர் 80W செயல்திறன் கொண்டது. டவர் ஸ்பீக்கரில் 8-இன்ச் வூஃபர்மற்றும் ஒலி வெளியீட்டைத் தனிப்பயனாக்க வால்யூம் பாஸ், ட்ரெபிள் கன்ட்ரோல் ஆகியவை உள்ளது. இந்த ஸ்பீக்கரை ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன், டேப்லெட் என பல சாதனங்களுடனும் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி இதில் புளூடூத் 5.1, FM, Aux மற்றும் USB சப்போர்ட்டும் உள்ளது. RGB விளக்குகள் மற்றும் வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோலருடன் வரும் இதன் விலை ரூ.7,199 ஆகும்.

    MORE
    GALLERIES

  • 56

    ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

    கிஸ்மோர் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் (ரூ.2,699): ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷலாக உங்கள் சகோதரிக்கு கேஜெட்களை பரிசளிப்பதாக முடிவெடுத்தால் ஸ்மார்ட் வாட்ச் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். கிஸ்மோர் பிராண்டு மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்லேட் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச் பெண் பயனர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.57 இன்ச் ஐபிஎஸ் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட செவ்வக டயலுடன் வருகிறது மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே (ஏஓடி) அம்சத்தையும் கொண்டுள்ளது. மெட்டல் பிரேமுடன் கூடிய நேர்த்தியான செவ்வக வடிவம் இந்த வாட்ச் ஸ்டைலிஷ் லுக்கை கொடுக்கிறது. இத்துடன் பிரீமியம் சிலிகான் ஸ்ட்ராப் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லேட் ஸ்மார்ட்வாட்ச் இளஞ்சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    ரக்‌ஷா பந்தன் ஸ்பெஷல்... பரிசாக கொடுக்கக்கூடிய கேஜெட்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

    பாகா புச்சி வுமன் வொண்டர் ஜங்கி ஸ்னீக்கர்ஸ் (ரூ. 1,299): பாகா புச்சி நிறுவனம் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ள ஒரு ஜோடி ஸ்னீக்கர்ஸ் நிச்சயமாக உங்கள் சகோதரி வேண்டாம் என சொல்லாமல் ஏற்றுக்கொள்ளக்கூடிய கிப்ட்டாக இருக்கும். கேஷ்வல் டிரஸ் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது இதனை பயன்படுத்தலாம். பட்ஜெட் பிரண்ட்லி ஸ்னீக்கர்களான இவை வெறும் ரூ.1,299-க்கு கிடைக்கிறது.

    MORE
    GALLERIES