முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

போகோ-வின் இந்தியா தலைவரான ஹிமான்ஷு டாண்டன் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். Poco பிராண்டின் அடுத்த ஸ்மார்ட் போன் 2 ரேம் மற்றும் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (8GB + 256GB , 12GB + 256GB) அறிமுகமாகும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

  • 16

    இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

    Poco நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் வரிசையை விரிவுபடுத்த தயாராக உள்ளது. Poco F5 ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த Poco F5 மொபைலானது Geekbench உள்ளிட்ட பெஞ்ச்மார்க்கிங் வெப்சைட்களில் சமீபத்தில் குறிப்பிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

    மிக சமீபத்தில், போகோ-வின் இந்தியா தலைவரான ஹிமான்ஷு டாண்டன் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். Poco பிராண்டின் அடுத்த ஸ்மார்ட் போன் 2 ரேம் மற்றும் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (8GB + 256GB , 12GB + 256GB) அறிமுகமாகும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

    முன்னணி பெஞ்ச்மார்க்கிங் வெப்சைட்கள் புதிய Poco F5 மொபைலின் சாத்தியமான ஸ்பெசிஃபிகேஷன்ஸ் பற்றிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளன. அந்த விவரங்களின் படி, Poco F5 மொபைலில் Snapdragon 7+ Gen 2 SoC ப்ராசஸர் இருக்கலாம். தவிர இதில் 8GB RAM மற்றும் Android 13 ஓஎஸ் இருக்கலாம். இதனிடையே Poco -வின் வரவிருக்கும் புதிய மொபைலை பற்றி ட்விட்டரில் ஹிமான்ஷு டாண்டன், F என்ற எழுத்தில் தொடங்கும் 5 வார்த்தைகளுடன் "It's Fast, It's fine tuned, It's Fearless, It's Fantastic, It's Futuristic.. அது என்ன?" என்று ஷேர் செய்துள்ளார். இந்த ட்விட் Poco F5-ஐ குறிப்பதாக இருக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

    Poco F5 மொபைலின் சாத்தியமான ஸ்பெசிஃபிகேஷன்ஸ் : மேலே குறிப்பிட்டபடி இன்னும் அறிமுகப்படுத்தப்படாத Poco F5 ஸ்மார்ட் போன் சமீபத்தில், பெஞ்ச்மார்க்கிங் வெப்சைட்டான கீக்பெஞ்சிலும் காணப்பட்டது. Poco F5 மொபைல் சிங்கிள்-கோர் டெஸ்டில் 1,118 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டிங்கில் 4,236 புள்ளிகளையும் பெற்றதாக பெஞ்ச்மார்க்கிங் லிஸ்ட்டிங் வெளிப்படுத்தி இருக்கிறது. தவிர இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்கக்கூடும் என்பதையும் கீக்பெஞ்ச் பட்டியல் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த பட்டியல் வரவிருக்கும் மொபைல் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 2 SoC ப்ராசஸர் மற்றும் 8GB ரேம் கொண்டிருக்க கூடும் எனவும் பரிந்துரைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

    முன்னதாக இந்தியாவில் Poco F4 5G மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அடுத்ததாக தற்போது Poco F5 5G மொபைல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மொபைல் Redmi Note 12 Turbo மொபைலின் ரீபிராண்டட் வெர்ஷனாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த தகவல் சரியாக இருந்தால் Poco F5 5G மற்றும் Redmi Note 12 Turbo ஆகிய 2 மொபைல்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவில் அறிமுகமாகமான Poco F5 ஸ்மார்ட் ஃபோன்.! சூப்பர் டூப்பர் அம்சங்கள்..

    கடந்த மார்ச் மாதம் சீனாவில் தோராயமாக ரூ.23,900 என்ற விலையில் Redmi Note 12 Turbo மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டது. பேஸ் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல் 6.7-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இதில் Snapdragon 7+ Gen 2 SoC ப்ராசஸர், 64MP டிரிபிள் ரியர் கேமராக்கள், 16 MP செல்ஃபி சென்சார் மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ,மற்றும் 5,000mAh பேட்டரி கெப்பாசிட்டி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES