முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

ஏற்கனவே அறிவித்தபடி போக்கோ F5 5G மாடல் ஆனது ஸ்னாப் டிராகன் 7+ gen2 பிராசஸருடன் வெளி வருகிறது. இந்த மார்ச் மாதம் தான் குவால்கம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 7+ gen2 சிப் செட்டை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 17

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தையானது மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கி பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சற்று கட்டுபடியான விலையில் கிடைக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது மெட்ரிக் ஸ்மார்ட்போன்களை சந்தையில் இருக்க ஆரம்பித்தன.

    MORE
    GALLERIES

  • 27

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறைந்த விலையில் யார் அதிக தரத்துடன் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது என்ற அளவிற்கு இன்றைய சந்தையின் நிலை மாறிவிட்டது. அந்த வகையில் போக்கோவின் புதிய F5 5G மாடல் ஆனது இன்று இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. இதற்கு முந்தைய மாடலான போக்கோ F4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்து போக்கோ F5 5G மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    மிகவும் சக்தி வாய்ந்த செயல் திறனை இது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்தில் இதற்கு முன்பு அறிவிப்பில் poco f5 மாடலானது உலகம் முழுவதும் ஸ்னாப்டம் செவன் பிளஸ் 2 ப்ரோசெசருடன் அறிமுகமாகவும் முதல் போன் என்று குறிப்பிட்டிருந்தது. கேமிங் புகைப்படங்கள் செயல் திறன் என பல்வேறு விதங்களிலும் சிறப்பாக செயல்படும் வகையில் இந்த மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    விலை எவ்வளவு ? : தற்போதைய நிலவரத்தின்படி புதிதாக வெளியாகும் போக்கோ F5 5G மாடல் ஆனது இந்திய மதிப்பில் ரூபாய் 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் பேஸ் மாடல் ஆனது ரூபாய் 28,000 திலிருந்து 29,000 வரை விற்பனை செய்யப்படலாம் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும் 30,000 ரூபாய் என்பது கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த விலை தான்.

    MORE
    GALLERIES

  • 57

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    ஏனெனில் தற்போது வெளியாகவுள்ள மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே இந்த விலை பட்டியலில் அடங்கும் வகையில் தான் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் போக்கோ F4 மாடலின் வெற்றியைத் தொடர்ந்துதான் போக்கோ F5 சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. போக்கோ F4 மாடலும் 30 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே 11ம் தேதி முதல் விற்பனைக்கு சந்தையில் இறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் இணையதளத்தில் வாயிலாகவே வாடிக்கையாளர்கள் இதனை பெற முடியும் என்று எதிர்பார்க்கபடுகிறது

    MORE
    GALLERIES

  • 67

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    சிறப்பம்சங்கள் : அந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி போக்கோ F5 5G மாடல் ஆனது ஸ்னாப் டிராகன் 7+ gen2 பிராசஸருடன் வெளி வருகிறது. இந்த மார்ச் மாதம் தான் குவால்கம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 7+ gen2 சிப் செட்டை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை குறி வைத்து இந்த சிப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்னாப் டிராகன் 18 சிப்புடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்த செயல் திறனை கொடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருந்தாலும், போக்கோவின் கூற்றுப்படி மிகவும் சக்தி வாய்ந்த ஒரு செயல் திறனை இதில் வெளிப்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் போக்கோ F5 5G ஸ்மார்ட்ஃபோன்..! முழு விவரம் இதோ..

    கார்பன் பிளாக் மற்றும் ஸ்னோஒயிட் என்ற இரண்டு நிறங்களில் இந்த போன் கிடைக்கும். மேலும் ட்ரிபிள் கேமரா செட்டப்பும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் 64 எம்பி கேமராவுடன் ஹைபர் ஸ்டபிலிட்டி வசதியும் இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் 30 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் ஐப்பர் ஆப்டிமைசேஷன் வசதியும் அளிக்கப்பட்டுள்ளதால் கேமிங் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஃபோனாக இருக்கும் என்று கூறுகின்றனர். இவற்றைத் தவிர 6.7 இன்ச் FHD பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே அளிக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவில் பன்ச் ஹோல் நாட்ச் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 128HZ ரிப்ரஷ் ரேட் உடன் 5000 mAH பேட்டரி திறனையும் இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES