பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டான Poco தனது புதிய மலிவு விலை சி-சீரிஸ் ஸ்மார்ட் ஃபோனான Poco C51-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. Poco-வின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் மொபைல் MediaTek Helio G36 ப்ராசஸர், 8MP டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் 10W சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது.
POCO C51 மொபைலின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை : இந்த புதிய Poco C51 மொபைலின் விலை ரூ.8,499 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 10 முதல் இ-காமர்ஸ் தளமான Flipkart-ல் கிடைக்கும். இந்த மொபைல் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த மொபைலை விற்பனை சலுகையாக ரூ.7,799 அறிமுக சலுகை விலையில் பெறலாம் என POCO நிறுவனம் கூறி இருக்கிறது. ராயல் ப்ளூ மற்றும் பவர் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் leather-like டிசைனுடன் இந்த மொபைல் வருகிறது.
POCO C51 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள் : Poco C51 மொபைலானது 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே 720×1600 ரெசல்யூஷன் மற்றும் 120Hz சேம்பிள் ரேட்டுடன் வருகிறது. இது கன்டென்ட் பார்ப்பதையும், வீடியோ கால்ஸ்களை மேற்கொள்வதையும் எளிதாக்குகிறது. இந்த புதிய மொபைல் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G36 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 2.2GHz வரை பீக் க்ளாக் ஸ்பீடை எட்டும். டூயல் சிம் கொண்ட Poco C51 மொபைலானது Android 13 (Go Edition)-ல் இயங்கும்.
Poco C51 மொபைலானது 5,000mAh பேட்டரி கெப்பாசிட்டியை கொண்டுள்ளது மற்றும் 10W சார்ஜிங் சப்போர்ட்டையும் பெற்றுள்ளது. Poco C51 மொபைலின் அளவு 76.75x164.9x9.09mm மற்றும் 192 கிராம் எடை கொண்டது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, Glonass, Beidou, மைக்ரோ-USB போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கும். Poco C51 மொபைலின் பின்புறத்தில் ரியர்-மவுண்ட்டட் ஃபிங்ர்-பிரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.