முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புதிய ஃபிளிப் போனை அறிமுகம் செய்ய உள்ளது ஓப்போ நிறுவனம்.

 • 17

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  சீனாவை மையமாக கொண்ட ஓப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஓப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஓப்போ நிறுவனம் இந்த புதிய போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்  தெரியவந்துள்ளது. ஓப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் வெளிவர உள்ளது. இணையத்தில் புதிய ஃபிளிப் போன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 27

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 6.8-இன்ச் அமோல்ட்  ஃபோல்டிங் டிஸ்ப்ளே வசதி உள்ளது. அதோடு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களளும் இந்த புதிய போனில் உள்ளன. சாம்சங் பிளிப் போனை விட இந்த ஓப்போ பிளிப் போன் ஒரு தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 37

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும் இந்த ஓப்போ பிளிப் போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும், சக்திவாய்ந்த மீடியாடெக் டைமென்சிடி 9000+ சிப்செட் வசதியும் உள்ளது இந்த புதிய ஃபிளிப் போனில்.  இது போன்ற சிறப்பம்சங்களால் இந்த போனுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-சுடன் அறிமுகமாக உள்ளது ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். கருப்பு மற்றும் பர்பில் நிறங்களில் இந்த ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் வெளிவர உள்ளது.  மேலும் இந்த போனின் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 67

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன். இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 32எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  சாம்சங்-கிற்கு போட்டியாக ஃபிளிப் போனை அறிமுகம் செய்யும் ஓப்போ..!

  எல்இடி பிளாஷ் லைட்டும் உள்ளது. 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி  அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஓப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். ஆனால் விலைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. விலையா பாஸ் முக்கியம்?.. ஃப்யூச்சர்ஸ் தானே முக்கியம்..

  MORE
  GALLERIES