ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய டேப்லெட்டான ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) விலையை சமீபத்தில் வெளிப்படுத்தியது. இந்த புதிய OnePlus Pad டேப்லெட்டானது சாம்சங், ரியல்மி, லெனோவா மற்றும் மோட்டோரோலாவின் பல டேப்லெட்களைப் போலவே ஆண்ட்ராய்டு Android OS-ல் இயங்குகிறது.எனினும் இது ஒரு ஃபிளாக்ஷிப் சிப்செட் மற்றும் ஹை-என்ட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பொதுவாக ஆண்ட்ராய்டு அடிப்படையிலான டேப்லெட்ஸ்கள் படிக்க, திரைப்படங்களை பார்க்க மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் சோர்வை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். எனினும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus Pad-ன் விலை சுமார் நாற்பதாயிரத்திற்கு அருகில் இருக்கிறது.
இதனால் யூஸர்கள் சில மலிவு விலை டேப்லெட்களை வாங்க நினைக்கலாம். இதனையடுத்து Xiaomi Pad 5 அல்லது Realme Pad X போன்ற விலை குறைவான டேப்லெட்ஸ்களை வாங்க சிலர் பரிசீலிக்கலாம். நீங்கள் புதிய டேப்லெட்டை வாங்க திட்டமிட்டிருந்தால் OnePlus Pad மற்றும் Xiaomi Pad 5 ஆகிய 2 உங்கள் பட்டியலில் இருந்தால், இரண்டுக்குமான விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் இடையிலான ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்...
டிஸ்ப்ளே : Xiaomi மற்றும் OnePlus ஆகியவை திறன் வாய்ந்த டிஸ்ப்ளேக்களை இந்த டேப்லெட்களில் வழங்குகின்றன. இருப்பினும் OnePlus Pad டிவைஸானது புதிய Notch-டான் கூடிய எட்ஜை பெறுகிறது. அதற்காக Xiaomi Pad 5-ன் டிஸ்ப்ளே மோசமாக உள்ளது என்று அர்த்தமல்ல. Xiaomi Pad 5 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் Dolby Vision உடன் 10.9-இன்ச் WQHD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் Bezel சைஸ்களும் சிறப்பாக உள்ளன. மேலும் இதில் போர்ட்ரெய்ட் ஓரியன்டேஷனில் 8MP கேமரா உள்ளது.
பர்ஃபார்மென்ஸ் : மேற்காணும் 2 டேப்லெட்ஸ்களிலும் குவால்காம் மற்றும் ஒன்பிளஸின் ஹை-என்ட் சிப்செட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. OnePlus Pad-ல் டைமென்சிட்டி 9000 SoC சிப்செட் உள்ளது, அதே சமயம் Pad 5 -ல் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 860 SoC சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 டேப்லெட்ஸ்களிலும் 5G திறன்கள் இல்லை. ஆனால் Realme Pad X-ல் கிடைக்கிறது.
OnePlus மற்றும் Xiaomi நிறுவனங்களின் இந்த 2 டிவைஸ்களுமே 256GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வருகின்றன. இருப்பினும், OnePlus Pad-ல் அதிக ரேம் கான்ஃபிகரேஷன் கொடுக்கப்பட்டுள்ளது, இது மல்டி-டாஸ்கிங்கை எளிதாக செய்ய உதவுகிறது. அதே போல 2 டேப்லெட்டுகளுமே ஆல்-டே பேட்டரி லைஃபிற்கு உறுதியளிக்கின்றன. எனினும் இது பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும்.
டேப்லெட்ஸ்களில் cellular connectivity இல்லாததால் அவை லேப்டாப்ஸ் அல்லது வழக்கமான தொலைபேசிகளுடன் ஒப்பிடும்போது சிறப்பான செயல்திறனை கொண்டிருக்கும். Xiaomi சுமார் 16 மணிநேர மூவி ப்ளேபேக்கை உறுதியளிக்கிறது. Pad 5 33W சார்ஜிங்குடன் 8720mAhn பேட்டரியைக் கொண்டுள்ளது. OnePlus Pad 67W சார்ஜிங் கொண்ட 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.