பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக இருக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் மார்ச் 14, 2023 அன்று இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் OnePlus Buds Pro 2R-ன் ஓபன் சேல்-ஐ துவக்கி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் Buds Pro 2R-ஆனது கடந்த பிப்ரவரி மாதம் Buds Pro 2, OnePlus 11, OnePlus 11R உள்ளிட்டவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒன்பிளஸ் வெப்சைட், அமேசான், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் உள்ளிட்டவற்றின் மூலம் Buds Pro 2R-ஐ யூஸர்கள் open sale-ல் வாங்கலாம். OnePlus Buds Pro 2-வை போலவே, Buds Pro 2R-ஆனது டூயல் டிரைவர்ஸ் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சங்களுடன் Dynaudio-ஆல் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ரீட்டெயில் ஸ்டோர்ஸ் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்-ல் கிடைக்கும் OnePlus Buds Pro 2R-வின் விலை ரூ.9,999 ஆகும். அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக இந்த Buds-ஐ வாங்குபவர்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்டு பயன்படுத்தினால் மற்றும் EMI ஆப்ஷனை பயன்படுத்தினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்டாக ரூ.500 தள்ளுபடி பெறுவார்கள்.
OnePlus Buds Pro 2 சீரிஸ் 2 TWS இயர்பட்ஸ்களை கொண்டுள்ளது. அதில் ஒன்று OnePlus Buds Pro 2 மற்றும் இரண்டாவது OnePlus Buds Pro 2R ஆகும். இந்த 2 TWS இயர்பட்ஸ்களும் சமநிலையான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸிற்காக11mm + 6mm டூயல் ஆடியோ டிரைவர்ஸ்களை கொண்டுள்ளது. பட்ஸ் ப்ரோ 2 TWS இயர்பட்ஸ்கள் BassWave அல்காரிதம்ஸ் மற்றும் Hi-Res ஆடியோ பிளேபேக்கிற்கு LHDC 4.0 கோடெக்-கையும் பயன்படுத்துகின்றன. ஒன்பிளஸ்ஸின் Buds Pro 2R மொபைலானது Dolby-யுடன் இணைந்து டெவலப் செய்யப்பட்ட கூகுளின் Spatial Audio -வையும் சப்போர்ட் செய்கிறது. Buds Pro 2-வானது டோல்பி ஹெட் டிராக்கிங்கை சப்போர்ட் செய்யும் அதே நேரம் Buds Pro 2R-ஆனது Fixed Spatial Audio-வை சப்போர்ட் செய்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் Buds Pro 2 சீரிஸானது ஃபெயின்ட், ஸ்மார்ட் & எக்ஸ்ட்ரீம் ஆகிய 3 மோட்ஸ்களிலும் ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்தை சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக மியூசிக் லிஸனிங் எக்ஸ்பீரியன்ஸை சிறப்பாக்க transparency mode-ஐ கொண்டுள்ளது. OnePlus Buds Pro 2 சீரிஸானது அப்சிடியன் பிளாக், ஆர்பர் கிரீன் மற்றும் மிஸ்ட்டி ஒயிட் உள்ளிட்ட மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
OnePlus Buds Pro 2R-ஆனது ANC ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது 39 மணிநேர பேட்டரி லைஃப் மற்றும் ANC ஆன் செய்யப்பட்டிருக்கும்போது 25 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. Buds Pro 2 Qi வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். அதே நேரம் Buds Pro 2R வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.