OnePlus நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய OnePlus 11 5G ஸ்மார்ட் ஃபோன் 2023 பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. எட்டர்னா கிரீன் & டைட்டன் பிளாக் கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் மொபைலானது நிறுவனத்தின் பல தயாரிப்புகளுடன் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.
Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸரை கொண்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட் ஃபோனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் அவுட்லெட்ஸ் மற்றும் அமேசான் மூலம் வாங்கலாம். பிப்ரவரி 14, 2023 மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
OnePlus 11 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ் : இந்த ஸ்மார்ட் ஃபோன் 6.7 இன்ச் 2K 120Hz சூப்பர்ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. Qualcomm-ன் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 ப்ராசஸர் மூலம் இந்த ஃபோன் இயக்கப்படுகிறது. SoC-ஆனது Ray tracing-ஐ சப்போர்ட் செய்கிறது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
இந்த மொபைலின் பின்புறத்தில் உள்ள டிரிபிள் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்890 பிரைமரி சென்சார் மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் உள்ளிட்டவை அடங்கும். இந்த புதிய OnePlus மொபைலானது செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 16 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
OnePlus 11 5G மொபைலானது 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது. இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. OnePlus 11 5G மொபைலானது சுமார் 40 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ்ஜாகிவிடும். இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் Oxygen OS-ல் இயங்குகிறது. இந்த மொபைலில் உள்ள கனெக்டிவிட்டி அம்சங்களில் 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.3, GPS மற்றும் பல அடங்கி உள்ளன. பாதுகாப்பிற்காக இந்த மொபைல் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சாருன் வருகிறது. இது டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.