Nothing ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 14 -க்கான அக்சஸ் பெறும் மற்றும் அதன் அம்சங்கள் இந்த மாதம் I/O 2023 நிகழ்வின் போது வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிக்சல் அல்லாத மற்ற பிராண்டு மொபைல் சாதனங்களில் முதல் முறையாக ஆன்ட்ராய்டு 14 பீட்டா 1 அணுகலைப் பெறும் முதல் போனாக Nothing Phone 1 மாறுகிறது. இது Phone 1 பயனாளர்களுக்கு மத்தியில் அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Nothing நிறுவனம் தனது Phone 1-ல் Nothing OS வெர்ஷனை வழங்குகிறது. இதன் மூலமாகக் கிடைக்கும் சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் கேமரா, ஒட்டுமொத்த பர்ஃபாமன்ஸ் மற்றும் பிற ஸ்டெபிலிட்டி மாற்றங்கள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. பிக்சல் 4 மற்றும் அதற்குப் பின்னர் வந்த பிக்சல் சாதனங்கள் ஆன்ட்ராய்டு 14 பீட்டாவிறகான அணுகலைப் பெறுவார்கள்.
Nothing நிறுவனம் தனது போன் 2 குறித்த வெளியீட்டுத்திட்டங்களை ஏற்கனவே உறுதி செய்துள்ளது. Nothing ஒரு ஃபிளாக்ஷிப் ப்ராடக்ட் ஆக இருக்கும் என்றும், அது Snapdragon 8 Gen series chipset மூலமாக இயங்கும் என்றும் நிறுவனத்தின் ஃபவுண்டர் கார்ல் பெய் கூறியுள்ளார். அதோடு கேமரா மற்றும் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் Phone 1 35,999 ரூபாய்க்கு வெளியிடப்பட்டது. மேலும் இந்த வருடத்தில் வெளியாக உள்ள Phone 2 விலை 55,000 ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆன்ட்ராய்டு 14 இதன் மிகப்பெரிய அப்டேட்டாக இருக்கும். யுட்டிலிட்டி அம்சங்களில் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து I/O 2023 keynote நிகழ்வில் கூகுள் கூற உள்ளது.