முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

வாட்டர் புரூஃப் மற்றும் டஸ்ட் புரூஃப் அம்சங்களுடன் புதிய போனான நோக்கியா XR21 தற்போது அறிமுகமாகியுள்ளது.

 • 16

  தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

  எச்எம்டி குளோபல் நிறுவனம் தனித்துவமான போன்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

  MIL-STD-810H இராணுவத் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69K மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் அலுமினியம் சேஸ், மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 6.49-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

  பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. புதிய நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619எல் ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

  இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16 எம்பி முன்புற கேமராவுடன் வெளிவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

  இந்த புதிய நோக்கியா போன் OZO ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது.  பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரும் இந்த புதிய போனில் இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது. 4800 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்டுடன் இந்த நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  தண்ணீரோ.. மணலோ நின்னு பேசும்.. வருகிறது நோக்கியாவின் சூப்பர் போன்!

  5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆப்சன்களும் இந்த போனில் இருக்கிறது. இந்த புதிய நோக்கியா போனின் எடை 231 கிராமாக உள்ளது. மிட்நைட் பிளாக் மற்றும் பைன் கிரீன் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போனின் இந்திய மதிப்பில் ரூ. 51,190 என்ற விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நோக்கியா XR21 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். அதனைத்தொடர்ந்து, மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES