எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் மற்றும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட் ஃபோனான Nokia C12 மொபைலை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 Go edition அடிப்படையிலான இந்த மொபைல் மேம்பட்ட செயல்திறன் மற்றும் குறைந்த பவர் கன்சம்ப்ஷன் கொண்ட ஸ்டாக் Android UI-யை வழங்குகிறது.
இந்த மொபைல் டார்க் சியான், சார்கோல் மற்றும் லைட் மின்ட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வருகிறது மற்றும் பிளாஸ்டிக் பிரேம் கொண்டுள்ளது. ஒரு வருட ரீபிளேஸ்மென்ட் உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும் Nokia C12 மொபைலில் octa-core (Unisoc 9863A1) ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த 2GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது. மேலும் 256GB வரை கூடுதல் ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக பிரத்யேக மைக்ரோ SD கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மொபைல் வயர்டு மற்றும் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ என இரண்டையும் சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைலின் பின்புறத்தில் 8MP பிரைமரி கேமராவும், முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் போன்ற அம்சங்களுக்கான சப்போர்ட்டுடன் ஃபேஸ் அன்லாக் அம்சமும் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.
HMD Globalன் அதிகாரியான சன்மீத் சிங் கோச்சார் புதிய Nokia C12 மொபைலைலின் அறிமுகம் பற்றி பேசுகையில், "Nokia C12-ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் சி-சீரிஸ் போர்ட்ஃபோலியோவில் மற்றொரு சிறந்த கூடுதல் மொபைலாகும். இந்த மொபைல் டியூரபிலிட்டி மற்றும் பர்ஃபாமென்ஸ் உள்ளிட்டவற்றை மலிவு விலையில் வழங்குகிறது. ஆக்டா-கோர் ப்ராசஸர் மற்றும் மேம்பட்ட யூஸர் அனுபவத்திற்காக விரிச்சுவல் மெமரி எக்ஸ்டெஷன் ஆப்ஷனுடன் வருகிறது. தரம், பாதுகாப்பு மற்றும் புதுமை உள்ளிட்டவை அடங்கிய இந்த டிவைஸை மலிவு விலையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
AndroidTM 12 (Go edition) கொண்ட நோக்கியா சி-சீரிஸ் டிவைஸ்கள் சராசரியாக 20% கூடுதல் ஃப்ரீ ஸ்டோரேஜை வழங்குகின்றன. எனவே யூஸர் இன்னும் கூடுதல் பாடல்கள் அல்லது படங்கள் அல்லது சில மணிநேர HD வீடியோக்களை தங்கள் டிவைஸில் சேமித்து கொள்ளலாம். மேலும் Nokia C12 டேட்டா வீணாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. AndroidTM 12 (Go edition) மூலம் 30% ஆப் ஃபாஸ்ட்டர் ஆப் ஓப்பனிங் டைம் எக்ஸ்பீரியன்ஸை யூஸர்கள் அனுபவிக்கலாம். அதே போல வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உங்கள் டிவைஸை பாதுகாப்பாக வைத்திருக்க குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் ரெகுலர் செக்யூரிட்டி அப்டேட்ஸ்களை உறுதி செய்கிறது.