முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

அமெரிக்காவின் புகழ்பெற்ற சர்வதேச அட்வர்டைசிங்கில் பல ஆண்டுகால நிபுணத்துவம் பெற்ற லிண்டா யாக்கரினோவைத் தான் டிவிட்டரில் புதிய தலைவராக தேர்வு செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

 • 16

  ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

  எப்போதுமே ட்விட்டர் பற்றிய செய்தி வந்தாலே அதில் எலான் மஸ்க் என்ன மாற்றத்தைச் செய்திருக்கிறார், எத்தனை பேரை பணிநீக்கம் செய்திருக்கிறார், புதிதாக எவற்றுக்கெல்லாம் கட்டணம் விதித்து இருக்கிறார் என்பதை பற்றி தான் பலரும் சிந்திப்பார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் புதிய தலைமை செயல் அதிகாரி ஒருவர் மிக விரைவில் டிவிட்டரில் பதவியேற்க இருக்கிறார் என்று அறிவித்திருந்தார். இது உலகம் முழுவதிலுமே மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 26

  ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

  ட்விட்டர்-ஐ எலான் மஸ்க் வாங்குவதற்கு என்னென்ன செய்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதுமட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாக கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து, பல ட்விட்டர் அலுவலகங்களை மூடியும் விட்டார்.

  MORE
  GALLERIES

 • 36

  ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

  ஒரு சில இடங்களில் மட்டும் தான் ட்விட்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய தலைமை செயல் அதிகாரியை பற்றி அறிவித்திருப்பது உண்மைதானா அல்லது வேறு ஏதேனும் பிரான்க் செய்கிறாரா என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அமெரிக்காவின் புகழ்பெற்ற சர்வதேச அட்வர்டைசிங்கில் பல ஆண்டுகால நிபுணத்துவம் பெற்ற லிண்டா யாக்கரினோவைத் தான் டிவிட்டரில் புதிய தலைவராக தேர்வு செய்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

  ட்விட்டரை எப்படியெல்லாம் மாற்ற வேண்டும், மிகச்சிறந்த ஒரு மைக்ரோ பிளாக்கிங் தளமாக உருவாக்க வேண்டும் என்று எலான் மஸ்க் பல விதமான கனவுகளை வைத்துள்ளார். எலான் மஸ்க்கின் கனவு ஃப்யூச்சரிஸ்ட்டிக்காக, ஊக்கமளிப்பதாக இருக்கிறது, இந்த சோசியல் மீடியா தளத்தை டிரான்ஸ்ஃபார்ம் செய்வதில் உற்சாகமாக பங்கேற்க இருக்கிறேன் என்று யாக்கரினோ டிவீட் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

  கடந்த வியாழனன்று யாக்கரீனோ ட்விட்டரின் சிஇஓ வாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியான 2-3 நாட்கள் அதை பற்றி அவர் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. வெள்ளிக்கிழமை அன்று எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மேற்கொண்டார். அதையடுத்து கடந்த சனியன்று யாக்கரீனோ ட்வீட் செய்தார். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கிய எலான், இப்பொழுது மற்றொரு பெண்மணியை அதன் தலைமை பொறுப்பில் அமர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 66

  ட்விட்டரை மீட்டெடுப்பாரா புது சிஇஓ? எலான் மஸ்க் நம்பிக்கையை பெற்ற லிண்டா யார் தெரியுமா?

  NBCUவில் பல ஆண்டுகள் அட்வர்டைசிங் துறையின் தலைவராக லிண்டா பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் சர்வதேச விளம்பர பிரிவில் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில், குறிப்பிடத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள வணிகர்களுடன், வணிக முகவர்களுடன் நல்ல பரிச்சயம் இருக்கிறது. ட்விட்டரின் எதிர்காலம் இனி லிண்டா யாக்கரீனோ கையில் இருக்கிறது. இவர் ட்விட்டர் 2.0வை விரைவில் உருவாக்குவார் என்று பல யூசர்கள் கருத்து கருத்து தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES