இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், கிராமம் முதல் நகரம் வரை அனைத்துத் தரப்பட்ட மக்களும் ஆன்லைன் பயன்படுத்துவதைத் தங்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டனர். இதோடு பிஸியான வாழ்க்கை, அதிக ட்ராபிக் மற்றும் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதற்கு நேரம் எதுவும் கிடைக்காமல் ஆன்லைனிலே பலர் ஷாப்பிங் செய்யத் தொடங்கி விட்டனர். இவ்வாறு மக்களிடம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது பிரபலமாகிவரும் அதே வேளையில் ஆன்லைன் மோசடிகளும் அதிரிக்க தொடங்குகிறது. குறிப்பாக டெலிவரி செய்யும் போது கேட்கப்படும் ஓடிபிக்களால் தான் மோசடிகள் அதிகரிக்கிறது என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்கள்.
டெலிவரி OTP மோசடி எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? : நீங்கள் ஆர்டர் செய்யாவிட்டாலும் கூட, உங்களுக்காக ஒரு பேக்கேஜ் இருப்பதாகக் கூறி உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி ஏஜென்ட் வருவதன் மூலம் இந்த OTP டெலிவரி மோசடி செயல்படுகிறது. இதோடு பேக்கேஜை வழங்குவதற்காக ஸ்கேமர் பெறுநரிடம் OTP கேட்கலாம் அல்லது பெறுநர் பேக்கேஜை ஏற்க மறுத்தால், மோசடி செய்பவர் பேக்கேஜை "ரத்து" செய்ய OTP கேட்கலாம் மற்றும் அவர்கள் OTP ஐப் பெறும் வரை வெளியேற மாட்டார்.நீங்கள் மற்ற பொருள்களைச் செய்த நியாபத்தில் OTP ஐ வழங்கினால், அது ஈ-காமர்ஸ் நிறுவனத்தின் மூலம் மோசடி செய்பவர்கள் உங்களது நிதித் தகவலை அணுகி உங்களின் பணத்தைத் திருடும் சூழல்ஏற்படும் எனவே இதுப்போன்ற சூழலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் : இன்றைக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் ஆடைகள் என அத்தனையும் ஆன்லைனின் ஆர்டர் செய்யும் போது வீட்டிற்கே நமக்காக ஏஜென்ட்டுகள் கொண்டுவந்துவிடுகின்றனர். இது நமக்கு மிகவும் எளிமையானதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் வந்து நான் தான், டெலிவரி ஏஜென்ட் அல்லது ஈ- காமர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறும் எவருக்கும் ஓடிபி(OTP) போன்ற முக்கியமான தகவல்களை வழங்கம் போது எச்சரிக்கையாக இருக்கவும்.
இதோடு e-காமர்ஸ் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் அல்லது டெலிவரிகள் மற்றும் கட்டணத்தை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது குறித்த தகவலுக்கு OTP கள் அல்லது பிற முக்கியத் தகவல்களுக்கான கோரிக்கைகளின் நியாயத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.உங்களது மொபைலுக்கு வரக்கூடிய எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்யாதீர்கள். இதோடு நம்பிக்கையில்லாத மற்றும் பிரபலம் இல்லாத இ- காமர்ஸில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களையும் உள்ளீடு செய்யக்கூடாது.