முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்றே பெரிய டிஸ்ப்ளேவாக மாறுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது

  • 17

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    பார்சிலோனாவில் நடைபெறும் உலக மொபைல் மாநாட்டில் (MWC 2023 மாநாட்டில்), மோட்டோரோலா நிறுவனம் இந்த Moto Rizr என அழைக்கப்படும் அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களுடன், சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    மோட்டோரோலா நிறுவனம் இதுபோன்ற மாடலை உருவாக்கி வருவதாக ஏற்கனவே பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

    MORE
    GALLERIES

  • 37

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    மோட்டோ ரேசர் : மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனானது குவால்காம் இன் முதன்மை தர சிப்செட் மூலம் இயக்கப்படும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். புதிய மோட்டோ ரேசர் 2022 ஸ்மார்ட் போனானது 8 ஜிபி ரேம், 12ஜிபி ரேம் மற்றும் 18ஜிபி ரேம் என்ற மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் எனவும் இந்த ரேம் வகைகள் உடன் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி என்ற இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாடுகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    ரேசர் மாடலில் 2.7 இன்ச் AMOLED பேனல் கொண்ட கவர் ஸ்கிரீன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 144Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதில் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், பன்ச் ஹோல் டிசைன், கவர் டிஸ்ப்ளேவில் சிறு மாற்றம் செய்யப்பட்டு 3.5 இன்ச் அளவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 57

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    மோட்டரோலா ரோலபில் கான்செப்ட் : மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கும் ரோலபில் கான்செப்ட் ஏற்கனவே மற்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்த ரோலபில் மாடல்களை விட வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ரோலபில் ஸ்மார்ட்போன்களின் ரோலபில் ஸ்கிரீன் அகல வாக்கில் நீண்டு டேப்லெட் அளவு டிஸ்ப்ளே போன்று மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது.

    MORE
    GALLERIES

  • 67

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    எனினும், மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்றே பெரிய டிஸ்ப்ளேவாக மாறுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன்.

    MORE
    GALLERIES

  • 77

    உலக மொபைல் மாநாட்டில் மோட்டரோலா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

    இந்த டிவைஸ் 5-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இதை 6.5-இன்ச் டிஸ்ப்ளே வரை ரோல் செய்ய முடியும். மேலும் இந்த கான்செப்ட் டிவைஸின் கேமரா திறன்கள் யூஸர்களை ஈர்க்க கூடியவை. இதில் உள்ள செல்ஃபி கேமிராக்கள், செல்ஃபி பிரியர்களுக்கு கிடைத்த ஒரு சிறப்பம்சமாகும். இந்த டிவைஸ் ஸ்மார்ட்போன் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதுமையான டிவைஸின் அறிமுகத்திற்காக வாடிக்கையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    MORE
    GALLERIES