ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் (2023-ஆம் ஆண்டில்) உலகளவில் மொபைல் யூஸர்கள் மோசடி அழைப்புகளால் சுமார் 58 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இழக்க நேரிடும் அபாயம் இருப்பதாக ஒரு புதிய அறிக்கை எச்சரித்து உள்ளது. Juniper Research-ன் கருத்துப்படி கடந்த ஆண்டும் மட்டும் மோசடியான ரோபோ கால்ஸ்களால் (Fraudulent robocalls) மொபைல் சப்ஸ்கிரைபர்ஸ் கடந்த ஆண்டு சுமார் 53 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்புகளை சந்தித்து உள்ளனர்.
இந்த நிலையில் இந்த இழப்பு மதிப்பு நடப்பாண்டில் சுமார் 5 பில்லியன் டாலர் அதிகரித்து 58 பில்லியன் டாலர் அளவை எட்ட கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்ஆத்தரைஸ்ட் கால் ஃபார்வேடிங் அல்லது காலர் ஐடி ஸ்பூஃபிங் போன்ற பலதரப்பட்ட மோசடி அழைப்புகளின் அதிகரிப்பால், பண மோசடியை இலக்காக கொண்ட மோசடி நபர்களினால் மொபைல் யூஸர்களின் நிதி இழப்புகள் இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கலாம் என்று இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
ஒருபக்கம் Robocalling Mitigation டூல்ஸ்களின் வளர்ச்சி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தாலும், புதிது புதிதாக பல மோசடி முறைகளை பயன்படுத்தி தங்களது மோசடிகளை அரங்கேற்றி வருவதால் வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் மோசடியால் இழக்கப்படும் நிதியின் அளவு ஆண்டுக்கு 70 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில்மோசடி ரோபோ கால்ஸ்களால் அதிகம் பாதிக்கப்படும் பிராந்தியமாக வட அமெரிக்கா தொடர்கிறது. வட அமெரிக்காவின் வளம் மற்றும் செழிப்பு உள்ளிட்டவை மோசடி செய்பவர்களுக்கு அதிகம் மோசடி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் காரணமாக நடப்பாண்டில் ரோபோ கால்லிங்கால் ஏற்பட போகும் நிதி இழப்புகளில் பாதிக்கும் மேல் வட அமெரிக்காவில் இருக்கும் என தெரிகிறது.
எனினும் STIR/SHAKEN ஃப்ரேம் வொர்க்கானது ரோபோகாலிங்கில் மோசடியான இழப்புகளின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை குறைத்துள்ளதாக அறிக்கை மதிப்பிட்டு உள்ளது. இந்த ஃப்ரேம் வொர்க்கை வட அமெரிக்கா ஏற்று கொண்டுள்ளதன் காரணமாக வரும் 2025-ஆம் ஆண்டு வாக்கில், ரோபோ காலிங் மூலம் ஏற்படும் மோசடி இழப்புகள் அங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பிரேசில் அதிக சராசரி ஸ்பேம் கால்ஸ்களை பெற்ற நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.