மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி வைத்து OpenAi என்ற நிறுவனத்தின் தயாரிப்பான chatgptஐ உருவாக்கியவரின் பெயர் மிரா முராடி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் யார், இந்தியரா என்ற கேள்வி எழுந்துள்ளது இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். மேலும், chat gpt பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றையும் இவர் தெரிவித்துள்ளார்.
35 வயதான மிரா முறாடி OpenAi நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தலைமையில்தான் chatgpt என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட் உருவாக்கப்பட்டது. மிராவின் பெற்றோர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டாலும், முறாடி என்பது அல்பேனிய நாட்டின் பெயர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
மிரா, அமெரிக்காவில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிரா டார்ட்மவுத் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து டெஸ்லாவில் மூன்று ஆண்டுகள் சீனியர் புராடக்ட் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார். OpenAi நிறுவனத்தில் ஜூன் மாதம் 2018ம் ஆண்டு வாஸ் பிரசிடெண்டாக பணிக்கு சேர்ந்தார். அதன் பிறகு தற்பொழுது தொழில்நுட்ப தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய தலைமையில்தான் chatgpt உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.
Chatgpt உலகை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், இதை தவறாக பயன்படுத்த முடியும் என்று இதை உருவாக்கியவரே தெரிவித்துள்ளார். டைம்ஸ் மேகசினுக்கு அளித்த பேட்டியில், உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய இந்த தொழில்நுட்பத்துக்கு விதிகள் தேவைப்படும் என்று கூறியுள்ளார். மனிதர்கள் வாழ்வில் ஆழமாக ஊடுருவும், மதிப்புகளுடன் தொடர்புள்ள இந்த Aiஐ எவ்வாறு நிர்வகிக்கப் போகிறீர்கள், என்ன விதிகளை கட்டமைக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். எனவே, chatgpt பயன்பாட்டுக்கான விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படலாம்.