சமீப காலமாக உலகம் முழுவதும் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்தான் சாட் ஜிபிடி. இது ஒரு செயற்கை நுண்ணறிவு ஆகும். ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு மனிதருடன் சகஜமாக உரையாடுவதுடன் அனைத்து விதமான கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது. கூகுள் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக வரும் என பலரும் இந்த சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவை பாராட்டி கூறி வருகிறார்கள். அதற்கேற்ப அந்த செயற்கை நுண்ணறிவும் பலவித அசாதாரணமான காரியங்களை செய்து வருகிறது.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அந்த செயற்கை நுண்ணறிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனமானது, பின்ங் (Bing) சர்ச் என்ஜினுடன் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை சேர்த்து, அதன் சர்ச் என்ஜினில் பல முன்னேற்றங்களை செய்துள்ளது. தற்போது சோதனை முறையில் உள்ள இந்த சர்ச் எஞ்சினை பயன்படுத்தி பார்க்க உலகம் முழவதும் உள்ள பல்வேறு மைக்ரோசாப்ட் யூசர்களுக்கும் அழைப்புகளை அனுப்பி வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இவ்வாறு சார்ஜ் பற்றி தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிங் சர்ச் இன்ஜின் ஆனது முன்னர் இருந்ததை விட அதிக செயல்திறனுடன் விளங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சோதனை முன்னோட்டத்தை பரிசோதித்துப் பார்க்கத்தான் உலகம் முழுவதும் பல்வேறு விதமான யூசர்களுக்கு அழைப்புகளை அனுப்பி வருகிறது. மேலும் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தினால் சக்தி ஊட்டப்பட்ட பிங் சர்ச் எஞ்சின் ஆனது தற்போது தான் ஆரம்ப நிலையில் இருந்தாலும், இதனை பரிசோதித்துப் பார்த்த பல்வேறு டெஸ்டர்களும் இதனைப் பற்றி புகழ்ந்து வருகின்றனர். மேலும் இதற்கேற்ப ஓபன் ஏஐ நிறுவனமும் சாட் ஜி பி டி -யை அவ்வபோது அப்டேட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த பிங் சர்ச் எஞ்சின் ஆனது மிக விரைவில் பல முன்னேற்றங்களை காணும் என பலரும் நம்புகின்றனர்.
இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அனுப்பப்படும் அழைப்புகளில் “உங்களுக்கு இந்த ஆரம்ப முன்னோட்டத்தை பரிசோதித்து பார்க்க அனுமதி அளிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்ற வாழ்த்துச் செய்தியோடு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.ஒருவேளை உங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் சோதனை முன்னோட்டத்தை பங்கேற்பதற்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை என்றாலும் கூட உங்களால் பிங் சர்ச் எஞ்சினின் புதிய சோதனை முன்னோட்டத்தில் பங்கேற்க இயலும். அதற்கு முதலில் உங்களது மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை இன்ஜினை டீஃபால் பிரவுசராக ட்மாற்றிக் கொள்வதன் மூலம் உங்களால் இந்த சோதனை முன்னாட்டத்தில் பங்கேற்க இயலும்.