OpenAI நிறுவனமானது அதன் ChatGPT சாட்போட்டுக்கான புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பது ChatGPT Plus என்ற பெயரில். ஆம், கூடுதல் அம்சங்கள் மற்றும் திறன்களுடன் ChatGPT Plus இருக்கும். இதற்கு தான் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது OpenAI நிறுவனம். அதே நேரம் யூஸர்கள் இலவசமாக பயன்படுத்தக்கூடிய ChatGPT-ஐ தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் வழக்கமான ChatGPT-யிலிருந்து இன்னும் கொஞ்சம் அதிகம் விரும்பும் யூஸர்களுக்காகவே ChatGPT Plus வேரியன்ட் சந்தா கட்டணத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 20 டாலர் என்ற மாதாந்திர சந்தா கட்டணத்துடன், ChatGPT Plus-ஆனது தற்போது அமெரிக்க யூஸர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த பட்டியலில் மேலும் பல நாடுகள் சேர்க்கப்படும் என்று OpenAI நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே OpenAI நிறுவனமானது தற்போது waiting list-ல் உள்ளவர்களை ChatGPT Plus ப்ரொகிராமிற்கு இன்வைட் செய்ய தொடங்கும். நிறுவனம் அறிக்கை ஒன்றில் ChatGPT Plus எனப்படும் இந்த புதிய சந்தா திட்டத்தின் மூலம், முடிந்தவரை பல யூஸர்க்களுக்கு வழக்கமான ChatGPT-ற்கான இலவச அணுகல் கிடைப்பதை சப்போர்ட் செய்ய எங்களால் உதவ முடியும் என கூறி இருக்கிறது.
ChatGPT Plus-ன் அம்சங்கள் : ஒரு ChatGPT பிளஸ் யூஸர் பீக் டைம்களில் ChatGPT-க்கான ஜென்ரல் அக்சஸை பெற முடியும். அதே போல் ChatGPT Plus யூஸர்கள் ஃபாஸ்ட்டர் ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் புதிய அம்சங்கள், திறன்களுக்கான பீரியாரிட்டி அக்சஸையும் அவர்கள் பெறுவார்கள். இந்த அம்சங்கள் ஏற்கனவே கசிந்த ChatGPT ப்ரோ ஸ்கீமை போலவே இருக்கின்றன. ChatGPT Plus-ஆனது முன்பு கசிந்த ChatGPT Pro விலையுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்த விலையில் வருகிறது.
ரிசர்ச் ப்ரிவ்யூ-வின் போது கிடைத்த ஃபீட்பேக்ஸ் அடிப்படையில் ChatGPT -ல் பல மாற்றங்களைச் செய்துள்ளதாக OpenAI நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் OpenAI நிறுவனம் ChatGPT API-ஐ வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. இது வணிகங்கள் ChatGPT-ஐ ஏற்கனவே இருக்கும் ஆப்ஸ்கள் மற்றும் சர்விஸ்களில் தடையின்றி இன்டகிரேடட் செய்ய அனுமதிக்கும் என கூறப்படுகிறது. யூஸர்களிடையே வெகு பிரபலமாக உள்ள ChatGPT-க்கு தற்போது பெரிய அளவில் போட்டி இல்லை என்றாலும், Google மற்றும் Baidu போன்ற பெரிய நிறுவனங்கள் இதே போன்ற சர்விஸை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
ChatGPT Plus-ஐ எப்படி சப்ஸ்கிரைப் செய்வது.! : ஏற்கனவே சொன்னபடி ChatGPT Plus-ற்கான சந்தா திட்டம் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வெயிட்டிங் லிஸ்ட்டில் சேர, ChatGPT Plus Google Doc படிவத்தைப் பூர்த்தி செய்யலாம், மேலும் ChatGPT Plus சேவையில் சேர மக்களை OpenAI இன்வைட் செய்ய தொடங்கும்.