முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

ஒரு வழியாக உலகம் முழுவதும் நடைபெற்று வந்த பணி நீக்க நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன என்று நினைத்திருந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மெட்டா...

 • 17

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  ஒரு வழியாக உலகம் முழுவதும் நடைபெற்று வந்த பணி நீக்க நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன என்று நினைத்திருந்த நேரத்தில், உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மெட்டா தன்னுடைய மூன்றாவது கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையை அடுத்த வாரம் முதல் தொடர போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  ஆனால் உண்மையிலேயே மெட்டாவின் சிஇஓ ஆன மார்க் ஜூக்கர்பர்க் சமீபத்தில் தான், வரும் மே 2023 முதல் அடுத்த கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அடுத்த வாரத்தில் மெட்டா நிறுவனத்தின் 6000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்டா நிறுவனத்திலிருந்து 11 ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்பட்டார்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  மேலும் 10,000 பேர் மார்ச் மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். புகழ்பெற்ற பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவானது, சமீபத்தில் மேலும் 4000 பேரை நிறுவனத்திலிருந்து நீக்கி உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த மே மாதத்தில் மேலும் 6000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்குறைப்பிற்கான அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளது. இது கண்டிப்பாக டெக் துறையில் உள்ள அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக என்னுடைய நிறுவனத்தையும் பாதிக்கும் என நிறுவனத்தின் உயரதிகாரியான Nick Clegg தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  இது கண்டிப்பாக மிகப் பெரும் அளவில் கவலைகளையும் அதே சமயத்தில் நிச்சயமற்ற தன்மையையும் உணர்த்துகிறது. இதை மிகவும் எளிய வழியிலும் ஆறுதலளிக்கும் வகையிலும் செய்து முடிக்க நான் விரும்புகிறேன். இந்த நிச்சயமற்ற தன்மையை பணியாளர்கள் பொருட்படுத்தாமல் தங்களது தொழிலை மிகவும் சிரத்தையுடன் செய்து வருவது அவர்கள் மீது உள்ள அபிமானத்தை இன்னும் எனக்கு அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  மேலும் மிக விரைவில் மெட்டா நிறுவனத்தில் உள்ள சீனியர்கள் அங்கிருக்கும் பணியாளர்களுக்கு பணி நீக்க நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை வெளியிடுவார்கள் என்றும், அது எப்போது துவங்க வேண்டும் என்பதை பற்றியும் எந்தெந்த குழுக்களை நீக்க போகிறார்கள் என்பதை பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு இமெயில் மூலம் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 67

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  மேலும் மெட்டா நிறுவனத்தின் அதிகாரியிடம் எதிர்காலத்தில் மீண்டும் பணி நீக்க நடவடிக்கைகள் இருக்குமா என்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதைப் பற்றி பேசிய மெட்டாவின் சிடிஓ ஆண்டரூ போஸ்வொர்த் கூறுகையில், “தற்போது வரை எங்களுக்கு அதைப் பற்றி எந்த ஒரு திட்டமும் இல்லை. இப்போதைக்கு ஒரு நிறுவனமாக நீண்ட கால அடிப்படையில் தற்போது நாங்கள் செய்து வருவதை தொடர்ந்து செய்ய விரும்புகிறோம். ஒருவேளை எதிர்காலத்தில் வருவாய் மற்றும் பொருளாதார அடிப்படையில் சில செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில், அந்த நேரத்தில் எந்த வித முடிவுகள் எடுக்கப்படும் என்பதை பற்றி எனக்கு தெரியாது. ஏனெனில் என்னால் எதிர்காலத்தை கணிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 77

  மீண்டும் பணி நீக்கம்..! மெட்டா நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரை நீக்க திட்டம்...

  தற்போது வரை இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஏதேனும் தொகை அளிக்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை இதற்கு முன்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு வேலை நீக்க ஊதியமானது கொடுக்கப்பட்டது. அதுபோலவே தற்போது பணி நீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கும் வேலை நீக்க ஊதியம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும் மெட்டா நிறுவனம் ஏன் திடீரென்று அதிக அளவில் பணியாளர்களை நீக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பல்வேறு காரணங்களை ஏற்கனவே மெட்டா-வின் சிஇஓ பல்வேறு நேர்காணல்களில் கூறிவிட்டார். இதில் முக்கியமானது பொருளாதார மந்த நிலை மற்றும் நிறுவனத்தின் மிக மெதுவான வளர்ச்சி ஆகும்.

  MORE
  GALLERIES