அந்த அளவில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் வாட்ஸ் அப் செயலியானது தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்கி வருகிறது. தற்போது வாட்ஸ் அப்பின் சிஇஓ ஆன மார்க் ஜுக்கர்பர்க் விண்டோஸ் இயங்கு தளத்திற்காக புதிய வாட்ஸ் அப்பை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்து உள்ளார். இந்த புதிய வாட்ஸ் அப்பில் 8 நபர்களுடன் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேசும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 நபர்கள் வரை ஒன்றாக சேர்ந்து வாய்ஸ் கால் பேச முடியும். இவை அனைத்துமே கணினி வழியாக மட்டுமே செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதை பற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மார்க் ஜுக்கர்பர்க் “விண்டோஸ் இயங்குதளத்திற்கான புதிய வாட்ஸ்அப் செயலியானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இப்போது நீங்கள் எட்டு நபர்கள் வரை இணைந்து பேசும் எண்டு டு எண்டு வீடியோ கால் வசதியும், 32 நபர்கள் வரை இணைந்து பேசும் ஆடியோ கால் வசதியும் பெற முடியும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய விண்டோஸ் டெஸ்க்டாப் செயலியானது மற்ற வாட்ஸ் அப் செயலிகளை விட அதிக வேகமாக இயங்கும் என்று வாட்ஸ் அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாட்ஸ் அப் டெஸ்க்டாப் செயலியின் யூஸர் இன்டர்ஃபேஸ் ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் யூஸர்களுக்கு மிகவும் பரிச்சயமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் யூஸர்களுக்கும் இது மிகவும் பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும்.
இதைத் தவிர எதிர்காலத்தில் புதிய அப்டேட்டுகள் அனைத்துமே இந்த வாட்ஸ்அப் பெஸ்ட் ஆப் செயலிக்கும் அளிக்கப்படும் என்று வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டிவைஸ்களுடன் இணைப்பதிலும், அவற்றில் உள்ள டேட்டாக்களை சின்க் செய்து இயங்குவதிலும் இந்த வாட்ஸ் அப் டெஸ்க்டாப் செயலியானது அதிவேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் புதிய ஸ்டிக்கர்களும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்ட்ராயிட் டேப்லட்-க்கு வரும் புதிய வாட்ஸ் அப் : வாட்ஸ்அப் ஆனது தன்னுடைய எல்லையை மேலும் புதிய டிவைஸ்களுக்கு விரிவுபடுத்த உள்ளது. சமீபத்தில் தான் நிறுவனமானது தன்னுடைய வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆண்ட்ராய்டு டேப்லெட் யூஸர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் வெகு விரைவிலேயே மேக் எங்கு தளத்தில் இயங்கும் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு புதிய அதிவேக வாட்ஸ்அப் செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது இது ஆரம்ப கட்ட நிலையில் பீட்டா வெர்ஷனில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.