முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிட்-ரேஞ்ச் 5G மொபைலான Pixel 7a, பேங்க் கார்ட் சலுகையுடன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த மொபைலின் அசல் விலை ரூ.43,999 ஆகும். இதற்கு ஆன்லைன் சலுகைகளும் உண்டு..

 • 15

  ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

  புதிய மொபைல் வாங்க வேண்டுமா.! அதற்கான உங்கள் பட்ஜெட் ரூ.40,000 என்றால்... நீங்கள் கூகுளின் Pixel 7a உள்ளிட்ட சில ஃபோன்களை தள்ளுபடி விலையில் வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். OnePlus 11R மற்றும் iQOO Neo 7 உள்ளிட்ட மொபைல்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எனினும் குறிப்பிட்ட சில மொபைகளை தள்ளுபடி விலையில் வாங்க விரும்பினால் உங்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பேங்க் கார்டுகள் இருக்க வேண்டும். ரூ.40,000-க்குள் நீங்கள் 5G மொபைல்களை வாங்க விரும்பினால் அதற்கான மொபைல்களின் பட்டியல் கீழே...

  MORE
  GALLERIES

 • 25

  ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

  தள்ளுபடி விலையில் Pixel 7a : சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிட்-ரேஞ்ச் 5G மொபைலான Pixel 7a, பேங்க் கார்ட் சலுகையுடன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த மொபைலின் அசல் விலை ரூ.43,999 ஆகும். உங்களிடம் HDFC பேங்க் கார்டு இருந்தால், ரூ.4,000 தள்ளுபடியுடன் Pixel 7a மொபைலை Flipkart வழியாக ரூ.39,999-க்கு வாங்கலாம். சிறந்த டிஸ்ப்ளே மற்றும் கேமரா, பிரீமியம் டிசைன் மற்றும் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறன் ஆகியவற்றை நியாயமான விலையில் பெற விரும்புவோருக்கு இது ஒரு மொபைல். இந்த மொபைல் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னலாஜி மற்றும் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் ரேட்டிங்கிற்கான சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. இதில் Tensor G2 SoC சிப்செட் மற்றும் 4,300mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் கிடைக்காது.

  MORE
  GALLERIES

 • 35

  ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

  OnePlus 11R : Flipkart-ல் OnePlus 11R மொபைல் ரூ.39,722 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மேலும் HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வங்கி சலுகையை பயன்படுத்தினால் இந்த மொபைலை ரூ.38,472-க்கு வாங்கலாம். பெரிய பேட்டரி, சிறந்த செயல்திறன் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை விரும்பும் நபர்கள் Pixel 7a மொபைலுக்கு பதில் இந்த OnePlus 11R-ஐ வாங்கலாம். இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் Pixel 7a அளவுக்கு இந்த மொபைலில் கேமரா நிச்சயமாக சிறப்பாக இல்லை. இந்த மொபைலோடு OnePlus ஒரு சார்ஜரையும் கொடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 45

  ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

  iQOO Neo 7: இந்த மொபைல் அமேசானில் அசல் விலை ரூ 29,999-க்கு கிடைக்கிறது என்றாலும் HDFC மற்றும் ICICI பேங்க் கார்டுகளில் தள்ளுபடி சலுகைகள் உள்ளன. குறிப்பிடப்பட்ட இந்த கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும் இறுதியாக இதன் விலை ரூ.27,999-ஆக குறைகிறது. உங்கள் பட்ஜெட் சற்று குறைவாக இருந்தாலும் கூட நல்ல செயல்திறன் கொண்ட 5G ஃபோன் வாங்க நினைத்தால் iQOO Neo 7 மொபைலை தேர்வு செய்யலாம். இந்த மொபைலில் சிறந்த செயல்திறனை வழங்கும் MediaTek Dimensity 8200 SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜர் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  ரூ.40,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..!

  கூடுதல் தள்ளுபடிக்கு : மேற்காணும் மொபைல்களை கூடுதல் தள்ளுபடி விலையில் பெற விரும்பினால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் நடத்தும் ஸ்பெஷல் சேலுக்காக காத்திருக்க வேண்டும். சம்மர் ஸ்பெஷல் சேல் சமீபத்தில் முடிந்தாலும் இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் நடத்தும் மாதாந்திர ஸ்பெஷல் சேலுக்காக காத்திருந்து வாங்கலாம்.

  MORE
  GALLERIES