பெல்ஜியம் : இணையப் பாதுகாப்பு, தனிநபர் உரிமை, தவறான செய்தி பரவுவதைத் தடுப்பது என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டு பெல்ஜியம் பிரதமர் அலக்சேண்டர் டி க்ரூ டிக் டாக் செயலியை 6 மாத காலங்களுக்குத் தடை செய்தார். மேலும் அந்நாட்டு மாநில பாதுகாப்பு சேவை மற்றும் அதன் இணையப் பாதுகாப்பு மையம் ஆலோசனைப் படி கடந்த மாதம் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.
கனடா : அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மொபைல்களில் டிக்டாக் செயலியில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக் கனடா அரசு தடை விதித்தது. இதற்குத் தனிமனித சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் காரணமாகச் சொன்னது கனடா அரசு. மேலும் வரும்காலத்தில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து : இந்த மார்ச் மாதம் இறுதிக்குள் நியூசிலாந்து அதிகாரிகள் தங்களின் மொபைல்போன்களில் உள்ள டிக்டாக் செயலிகளை நீக்க நியூசிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிகாரிகளுக்கு ஜனநாயக கடமையாற்ற டிக்டாக் செயலி தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.