யுபிஐ (UPI) என்றால் என்ன?
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் நீண்ட ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது தான் இந்த UPI. அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு. யுபிஐ (UPI) என்றால் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payment Interface (UPI)).
யுபிஐ (UPI) பயன்படுத்த, நீங்கள் ஒரு பேங்க் அக்கவுன்ட் (Bank account) வைத்திருக்க வேண்டும், அதாவது, யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்த உங்கள் பேங்க் உங்களை அனுமதிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (State Bank of India (SBI), HDFC Bank, and ICICI Bank) போன்ற பேங்க்களில் பேங்க் அக்கவுன்ட்டை வைத்திருக்க வேண்டும். உங்கள் பேங்க் யுபிஐ பேமெண்ட்டுகளை சப்போர்ட் செய்கிறதா, என்பதை நீங்கள் செக் செய்து பார்த்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் யுபிஐ சப்போர்ட் ஆப்ஸைப் டவுன்லோட் செய்ய வேண்டும்.
யுபிஐ மூலம் பணம் செலுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் BHIM முக்கியமானது, இது NPCI ஆல் உருவாக்கப்பட்டது, மேலும் சில தனியார் ஆப்ஸ்களிளும் இத்தகைய பேமெண்ட்டுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, அமேசான் பே (Paytm, PhonePe, Google Pay, Amazon Pay) போன்றவை மக்களிடையே பிரபலமானவை. வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்க.