5ஜி தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், ஐபோன் யூசர்கள் தங்களுக்கு எப்போதும் 5ஜி வரும் என்று காத்திருந்தார்கள். ஆப்பிள் நிறுவனம் iOS16.2 என்ற ஒரு சாப்ட்வேர் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. இதை அப்டேட் செய்துகொள்வதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களிலும் இனி 5ஜீ கனெக்டிவிட்டி பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய 5ஜி பயன்படுத்தக்கூடிய அம்சம் கொண்ட ஐபோன் சீரிசை 2020 ஆம் ஆண்டே வெளியிட்டிருந்தது. அதற்கு பிறகு வெளியான அனைத்து ஐஃபோன்களிலும் 5ஜி பயன்படுத்தும் ஆப்ஷன்தான் உள்ளது. ஆனாலும் எல்லா ஐஃபோன் யூசர்களுக்கு 5ஜி பயன்படுத்த முடியுமா? இந்தியாவில் 5சியை பயன்படுத்த விரும்பும் ஐபோன் யூசர்கள் இந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் ஐஃபோனில் 5ஜி வேண்டும் என்றால், இந்த அப்டேட் முக்கியம் : மேலே கூறியுள்ளது போல சமீபத்தில்தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் 5ஜி பயன்படுத்த உதவும் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. உங்கள் 5ஜி இணைப்பு இருக்கும் ஐஃபோன்களில் iOS16.2 என்ற அப்டேட்டை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.
எல்லா ஐஃபோன்களிலும் 5ஜி பயன்படுத்த முடியாது : ஐஃபோன் 12 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் 5ஜியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து வெளியான அனைத்து மாடல்களிலுமே 5ஜி இருந்தது. ஐஃபோன் 12 மினி, ஐஃபோன் 12, ஐஃபோன் 12ப்ரோ, ஐஃபோன் 13 மினி, ஐஃபோன் 13, ஐஃபோன் 13 ப்ரோ & ப்ரோ மேக்ஸ், ஐஃபோன் 14, ஐஃபோன் 14 மினி, ஐஃபோன் 14 ப்ரோ & ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் மட்டுமே 5ஜி இணைப்பு உள்ளது. இதை தவிர்த்து வேறு ஐஃபோன் மாடல்களில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாது.
iOS 16.2 அப்டேட் 5ஜி இல்லாத மாடல்களில் கிடைக்காது : ஆப்பிள் வெளியிட்ட இந்த புதிய சாப்ட்வேர் அப்டேட் என்பது 5ஜி பயன் படுத்துவதற்காகவே வெளியிடப்பட்டது. ஆனால், 11 சீரிஸ் மற்றும் அதற்கு முந்தைய ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்த சாப்ட்வேர் அப்டேட் பயன்படுத்தினால் 5ஜி கிடைக்காது. 5ஜி தவிர்த்து, இந்த அப்டேட் செய்யும் போது, வேறு சில அம்சங்கள் புதுப்பிக்கப்படும்.
உங்கள் ஏரியாவில் 5ஜி இருக்கிறதா என்று பாருங்கள் : 5ஜி என்பது மொபைலில் 5ஜி இணைப்பு இருந்தால் மட்டும் போதும் அல்லது உங்கள் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் நிறுவனத்தில் 5ஜி இணைப்பு இருந்தால் போதும் சாப்ட்வேர் அப்டேட் செய்து, அதில் அம்சம் சேர்க்கப்பட்டு இருந்தால் போதும் என்று ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் செயல்படாது. இவை இருந்தால்தான் நீங்கள் எந்த பிராண்ட் போனை பயன்படுத்தி ஆனாலும் 5ஜி சேவையை பெற முடியும். எனவே நீங்கள் 5ஜூ கனக்டிவிட்டி உள்ள ஐஃபோன் பயன்படுத்தினால் கூட, நீங்கள் வசிக்கும் இடத்தில் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்றால் உங்களால் இணைப்பை பெற முடியாது.
உங்கள் டெலிகாம் நிறுவனம் 5ஜி வழங்க வேண்டும் : 5ஜியை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கில் சேவைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது உங்கள் நீங்கள் வசிக்கும் இடத்தில் இருக்க வேண்டும். நீங்கள் 5ஜி வழங்கும் நகரில் இருந்தால்கூட, நீங்கள் வசிக்கும் இடத்தில் 5ஜி இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.