ஐபோனின் மஞ்சள் நிற எடிஷனை விரும்பாதவர்களுக்கு கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் ஊதா என நான்கு நிறங்களில் ஐபோன் 14 கிடைக்கிறது. மஞ்சள் நிறத்தை விரும்பாதவர்கள் இந்த நான்கு நிறங்களில் தங்களுக்கு பிடித்த மாடல் எதையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இவற்றின் விலையானது 67,999 ஆகும். இதில் சிவப்பு நிற மாடலின் விலையானது 66,999 ஆகும்.
அந்த மாடல் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையிலும் கூட தற்போது வரை அந்த ஃபோனின் விற்பனை நன்றாக உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் ஐபோனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயத்தில் பழைய மாடல்களில் வெளி வரும் ஐபோனிலும் வாடிக்கையாளர்கள் விரும்பத் தகுந்த வகையில் பல்வேறு நிறங்களில் அவை கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.