ஆனால் ஆப்பிள் வெப்சைட்டை விட ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் விஜய் சேல்ஸ் ஆகியவை குறிப்பிட்ட இந்த டிவைஸிற்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. எனவே, நீங்கள் புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் ஒருவேளை இது உங்களுக்கு சரியான நேரமாக இருக்கும்.iPhone 14 மொபைலுக்கு Flipkart-ஆனது 12% தள்ளுபடியும், Flipkart Axis Bank கார்டுகளுக்கு 5% கேஷ்பேக்கும், HDFC பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடியும் வழங்குகிறது.
அதே நேரம் Amazon இந்த மொபைலை 10% தள்ளுபடியுடன் ரூ.71,999-க்கு விற்பனை செய்வதோடு பேங்க் ஆஃபர்களையும் வழங்குகிறது. மறுபுறம் விஜய் சேல்ஸ் பல வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆகியவற்றுடன் 11% தள்ளுபடி வழங்குகிறது. புதிய iPhone 14-ஐ மேலும் குறைவான விலையில் வாங்க வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் பெறலாம்.
ஃபிளிப்கார்ட்டில் iPhone 14-க்கு கொடுக்கப்படும் சலுகை : பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான ஃபிளிப்கார்ட் தற்போது இந்த பிரீமியம் மொபைலான iPhone 14-ஐ ரூ.40,749-க்கு விற்பனை செய்து வருகிறது.128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் கூடிய iPhone 14-ஐ வாங்க 12% தள்ளுபடி ஃபிளிப்கார்ட் வழங்குகிறது. ஏற்கனவே குறிப்பிடப்படி வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank கார்டை பயன்படுத்தி 5% கேஷ்பேக் மற்றும் HDFC பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடியையும் பெறலாம். ஒருவர் தனது பழைய மொபைலை ரூ.29,250 வரை எக்ஸ்சேஞ்ச் செய்து, புதிய iPhone 14-ஐ மிக குறைந்த விலையில் பெறலாம்.
அமேசானில் iPhone 14-க்கு கொடுக்கப்படும் சலுகை : மறுபுறம் அமேசான் iPhone 14-ஐ 10% தள்ளுபடியுடன் ரூ.71,999 விலையில் வழங்குகிறது. அதே நேரம் Amazon பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.4,000 வரை வங்கி சலுகைகளை வழங்குகிறது. மேலும், அமேசான் ரூ.19,700 வரை ட்ரேட்-இன் டிஸ்கவுன்ட்டை தள்ளுபடியை வழங்குகிறது, இதனால் ஐபோன் 14-ன் விலையை மேலும் குறைத்து ரூ.52,299-க்கு வாங்கலாம்.
விஜய் சேல்ஸில் iPhone 14-க்கு கொடுக்கப்படும் சலுகை : விஜய் சேல்ஸ் நிறுவனமும் ஆப்பிலிங் iPhone 14-க்கு பெரும் தள்ளுபடியையும் வழங்குகிறது. விஜய் சேல்ஸ் மூலம் இந்த மொபைலை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 11% தள்ளுபடியையும், HDFC கார்டுகளில் ரூ.4,000 கேஷ்பேக் மற்றும் யெஸ் பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 வரை 5% உடனடி தள்ளுபடி போன்ற கவர்ச்சிகரமான வங்கி சலுகைகளையும் பெறலாம்.