ஹோம் » போடோகல்லெரி » தொழில்நுட்பம் » அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

IPhone At Low Price : இந்த ஐ ஃபோன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

 • 16

  அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

  ஆப்பிள் நிறுவனத்தின், புத்தம் புதிய ஐஃபோன் 13 - ரெட் கலர் தற்போது இந்தியாவில் ரூ.71,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐ ஃபோனின் விலையை நீண்ட காலமாக பார்த்து வந்திருப்பவர்களுக்கு, இதுதான் குறைவான விலை என்பது புரியும். இந்த ஐஃபோன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 26

  அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

  அமேசானில் மட்டுமே இந்த சலுகை :தற்போதைய சூழலில், இந்தக் குறைந்த விலை சலுகை அமேசான் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் ரெட் கலர் வேரியண்ட் மட்டுமே இந்த விலையில் வழங்கப்படுகிறது. அதுவே வேறு கலர் வேரியண்ட்களை நீங்கள் தேர்வு செய்தால் அதன் விலை ரூ.74,990 ஆகும். இந்த விலைக்கு அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது. அதே சமயம், ஐஃபோன் 13க்கு ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்துள்ள விலை ரூ.79,990 என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 36

  அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

  ரூ.12,500 வரை சலுகை கிடைக்கும் : ஆப்பிள் ஐஃபோன் 12 ஜிபி ரேம் வசதி கொண்டது. ரெட் வேரியண்ட் ஃபோனை நீங்கள் அமேசானில் வாங்கும்போது, தகுதியுள்ள மற்றொரு ஃபோனை எக்ஸ்சேஞ்ச் அடிப்படையில் வழங்கினால் உங்களுக்கு ரூ.12,500 வரை கட்டண சலுகை கிடைக்கும். இதேபோல ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த வேரியண்ட் ஃபோனை நீங்கள் வாங்கினால், உங்களுக்கு உடனடியாக ரூ.5,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.66,990 என்ற விலையில் நீங்கள் ஃபோனை பெற்றுக் கொள்ள முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

  ஐஃபோன் 12 மாடலில் உள்ள வசதிகள் : இந்த ஃபோன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எடை 174 கிராம் ஆகும். இரண்டு பக்கமும் கொரில்லா கிளாஸ் டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே அளவு 6.1 இன்ச் ஆகும். ஐஃபோன் 13 மாடலில் ஐஓஎஸ் 15 சாஃப்ட்வேர் இடம்பெற்றுள்ளது. இதை நீங்கள் ஐஓஎஸ் 15.4.1 வரை அப்கிரேடு செய்து கொள்ளலாம். இதன் ரிசொல்யூஷன் அளவு 1170 * 2532 ஆகும்.

  MORE
  GALLERIES

 • 56

  அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

  மெமரி மற்றும் கேமரா வசதி : இந்த ஃபோனில் எக்ஸ்டர்னல் மெமரி கார்டு நீங்கள் பயன்படுத்த முடியாது. அதே சமயம், 4 ஜிபி ரேம் வசதி கொண்டது. மெமரியை பொருத்தவரையில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய வேரியண்ட்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 12 எம்பி பிக்ஸல் கொண்ட டூயல் கேமரா வசதி உள்ளது. 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் விற்கப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட IPhone13..

  பேட்டரி மற்றும் இதர வசதிகள் : லித்தியம் ஐயன் வகையில் 3,240 எம்ஏஹெச் கொண்ட பேட்டரி வசதி இதில் இருக்கிறது. ஸ்டார்லைட், மிட்நைட், ப்ளூ, பிங்க், ரெட் மற்றும் க்ரீன் ஆகிய கலர்களில் ஃபோன் வாங்கி கொள்ளலாம்.

  MORE
  GALLERIES