ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் மேக்புக் ஏர் ஆகியவற்றில் ஒன்றை அல்லது இந்த இரண்டையுமே வாங்க வேண்டும் என்கிற பிளான் உங்களுக்கு இருந்தால், இதுதான் சரியான நேரம். ஏனெனில் இந்த 2 டிவைஸ்களுமே தற்போது ஆஃப்லைன் கடைகளின் வழியாக "மிகவும்" குறைந்த விலையில் வாங்க கிடைக்கின்றன. உடன் அணுக கிடைக்கும் சில பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களானது குறிப்பிட்ட டிவைஸ்கள் மீதான ஒப்பந்தத்தை இன்னும் சிறப்பாக்குகின்றன.
ஆப்பிள் ஐபோன் 13 மாடல் ஆனது இந்தியாவில் ரூ.79,900 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால், இந்த விலையை நீங்கள் ரூ.71,910 ஆக குறைக்க முடியும். அதற்கு இமேஜின் வழங்கும் 10 சதவீத தள்ளுபடியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் நீங்கள் ரூ.7,990 என்கிற பிளாட் தள்ளுபடியை பெறுவீர்கள். எச்டிஎப்சி பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,000 கேஷ்பேக் சலுகையும் உள்ளது, இதன் மூலம் ஐபோன் 13 மாடலின் விலையை ரூ.66,910 ஆக குறைக்கலாம்.
இதுதவிர்த்து உங்கள் பழைய போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.22,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் வேல்யூ அணுக கிடைக்கும். கூடுதலாக இந்த ஸ்டோர், எக்ஸ்சேன்ஜிற்காக ரூ.5,000 என்கிற போனஸ் தள்ளுபடியையும் வழங்குகிறது. ஆகமொத்தம், இந்த எல்லா சலுகைகளையும் பயன்படுத்தினால் ஒரு ஐபோன் 13 மாடலை உங்களால் ரூ.60,000க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.
தற்போது ரூ.92,900 க்கு விற்பனை செய்யப்படும் இந்த லேப்டாப்பை, இமேஜின் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ.83,610 க்கு வாங்கலாம். அதாவது, இந்த சலுகையின் கீழ் நீங்கள் ரூ.9,290 சேமிக்கலாம். இது தவிர, எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளுக்கு ரூ.6,000 தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. எனவே, இந்த லேப்டாப்பின் விலையை நீங்கள் ரூ.77,610 ஆக குறைக்க முடியும். கடைசியாக இதன் மீது எக்ஸ்சேன்ஜ் சலுகையும் கிடைக்கிறது. அதன் கீழ் ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும், ரூ.7,000 கூடுதல் போனஸ் தள்ளுபடியையும் பெறலாம்.