முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » 5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் துரிதமாக செய்து வருகின்றன.

  • 17

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    கடந்த 150 நாட்களில் இந்தியாவில் இணையதள தரவு வேகம் சுமார் 115 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஊக்லா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் துரிதமாக செய்து வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 27

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    5ஜி சேவை வரவால் இந்தியாவில் இணைய பயன்பாடு புதிய வேகத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் சுமார் 115 விழுக்காடு அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து உள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    குறிப்பாக கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம் 5ஜி சேவை தொடங்கப்பட்ட பிறகு மொபைல் டவுன்லோட் வேகம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக மொபைல் மற்றும் இணைய சேவை தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் ஊக்லா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    அதோடு, சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி 69-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 69-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என ஊக்லா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இணைய வேகத்தில் மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    ஊக்லா அறிக்கையின்படி இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்இடி வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும், இந்த இரண்டு நிறுவனங்கள் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டுள்ளதாகவும், அந்நிறுவனங்களின் முதலீடுகள் அதிக பலன் கொடுக்க துவங்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
    கடந்த ஆண்டு இறுதியில் மீடியன் 5ஜி டவுன்லோட் வேகத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன.

    MORE
    GALLERIES

  • 67

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    ஆனால் தற்போது 5ஜி மீடியன் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. அதிலும் தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற பகுதிகளில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது என ஊக்லா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    5ஜி நெட்.. ஸ்பீடு அள்ளும் இன்டர்நெட்.. இணைய வேகத்தில் முன்னேறும் இந்தியா!

    ஆனால் பொதுத்துறை தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுனமான பிஎஸ்என்எல் இன்னும் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை மற்றும் அடுத்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    MORE
    GALLERIES