முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

IAMAI மற்றும் KANTAR இணைந்து தயாரித்த இந்த அறிக்கையானது வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் செயலில் உள்ள இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை 900 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளது.

 • 16

  மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

  இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) மற்றும் KANTAR ஆகியவை கூட்டாக சேர்ந்து சமீபத்தில் ‘Internet in India Report 2022’ என்ற அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையில் ஆக்ட்டிவ் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கையில் இந்தியா அதிகரிப்பை கண்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.சுமார் 52% இந்தியர்கள் அதாவது 759 மில்லியன் ஆக்ட்டிவ் இன்டர்நெட் யூஸர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை இன்டர்நெட்டை அணுகுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

  அதே போல இந்த அறிக்கை, மேற்காணும் 759 மில்லியன் ஆக்ட்டிவ் இன்டர்நெட் யூஸர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புற இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் நாட்டில் இன்டர்நெட் வளர்ச்சி மற்றும் பயன்பாடு எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை குறிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

  கிராமப்புற இந்தியாவின் பங்கு : கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆக்ட்டிவாக இருந்த 759 மில்லியன் இன்டர்நெட் யூஸர்களில் சுமார் 399 மில்லியன் யூஸர்கள் கிராமப்புற இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 360 மில்லியன் யூஸர்கள் நகர்ப்புற இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

  பெரும்பாலான இந்தியர்கள் ஆக்ட்டிவாக இருக்கும் இன்டர்நெட் யூஸர்களாக இருப்பது இதுவே முதல் முறை” என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து புதிய இன்டர்நெட் யூஸர்களில் 56% பேர், கிராமப்புற இந்தியாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என இந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

  டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சோஷியல் மீடியா : நாட்டில் Digital Penetration என்பது ஆழமாக மேம்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 100% யூஸர்கள் மொபைல் வழியாக இன்டர்நெட்டை அணுகும் அதே நேரம், டேப்லெட்ஸ் மற்றும் ஸ்ட்ரீமிங் டிவைஸ் போன்ற பிற டிவைஸ்களின் பயன்பாடு கடந்த ஆண்டில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது. பயன்பாட்டின் அடிப்படையில் டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சோஷியல் மீடியா உள்ளிட்டவை நாட்டில் மிக பிரபலமான சேவைகளாகத் தொடர்கின்றன.

  MORE
  GALLERIES

 • 66

  மில்லியனை தாண்டும் இன்டர்நெட் யூஸர்களின் எண்ணிக்கை..? 2025க்குள் இந்த எண்ணிக்கை கன்ஃபார்ம்..

  13% வளர்ச்சியை பெற்றுள்ள டிஜிட்டல் பேமென்ட்ஸ் : டிஜிட்டல் பேமென்ட்ஸ் கடந்த 2021-ல் 13% வளர்ச்சியை கண்டுள்ளன, இது 338 மில்லியன் யூஸர்களை எட்டியுள்ளது, இதில் 36% கிராமப்புற இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். அனைத்து டிஜிட்டல் பேமெண்ட் யூஸர்களில் 99% UPI யூஸர்கள் ஆவர். மேலும் வரும் 2025-ஆம் ஆண்டில், அனைத்து புதிய யூஸர்களில் 65% பேர் பெண்களாக இருப்பார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-ல் இந்த எண்ணிக்கை 57%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES