இந்திய செல்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது எச்டிசி நிறவனம். ஐந்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை பல மாடல் போன்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. வைல்ட்ஃபயர் இ2 பிளே எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையும் ரூ.10ஆயிரத்துக்குள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளே, ஆக்டோ கோர் பிராசஸர், நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.82-இன்ச் எல்சிடி டிஸ்பிளேயுடன் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளியாகியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் போன். 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc T606 12என்எம் பிராசஸர் உடன் Mali G57 MP1 GPU ஆண்ட்ராய்டு பேஸ்ட் கிராபிக்ஸ் கார்டும் இதில் உள்ளது.
இந்த புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 பிளே ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா, + 2எம்பி டெப்த் சென்சார், + 2எம்பி மேக்ரோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.