முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

இதுவரை புகைப்படம் அல்லது வீடியோ கிளிப்பைத் தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்தோம். இனி உங்கள் குரல் பதிவையும் ஸ்டேட்டசாக வைக்கலாம். புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

 • 16

  வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

  இதுவரை புகைப்படம் அல்லது 30 விநாடிகளுக்கு உட்பட்ட  வீடியோ க்ளிப்களை தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்தோம். இனி உங்கள் குரல் பதிவையும் ஸ்டேட்டசாக வைக்கலாம். இதுதொடர்பாக புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், தொழில்நுட்ப மேம்பாட்டு ரீதியாகவும் பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 26

  வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

  அப்படி மற்றுமொரு புதிய அப்டேட் தான் வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ். ஒரு வாய்ஸ் நோட்டை, அதாவது உங்கள் குரலை எப்படி ரெக்கார்ட் செய்து, அதை எப்படி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைப்பது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

  லேட்டஸ்ட் அப்டேட் வழியாக புதிய எமோஜி ரியாக்ஷன்ஸ் மற்றும் ப்ரைவேட் ஆடியன்ஸ் செலக்டர் போன்ற புதிய அம்சங்கள் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஆண்ட்ராய்டு  மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான வாய்ஸ் ஸ்டேட்டஸ்  அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெர்சனல் சாட் மற்றும் க்ரூப் சாட்களில் மட்டுமே வாய்ஸ் மெசேஜ்களை ரெக்கார்ட் செய்து, ஷேர் செய்ய அனுமதித்த வாட்ஸ்அப், தற்போது அதை ஸ்டேட்டஸ் ஆக செட் செய்யவும் அனுமதிக்கிறது. இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சமானது வீடியோ ஸ்டேட்டஸை போலவே 30 வினாடிகள் என்கிற வரம்பை கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

  அதாவது 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் ரெக்கார்டிங்கை மட்டுமே உங்களால் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும். ஒருவேளை மிகவும் நீளமான வாய்ஸ் ஸ்டேட்டஸ்-ஐ செட் செய்ய விரும்பினால் 30 நொடிகளுக்கு பிறகு விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தொடங்கி, அடுத்தடுத்த வாய்ஸ் ஸ்டேட்டஸ்களை செட் செய்யலாம். முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு  அப்டேட் செய்து விட்டீர்கள் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 56

  வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

  பின்னர் ஸ்டேட்டஸ் டேப்பிற்கு செல்ல இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும், அல்லது நேரடியாக ஸ்டேட்டஸ் டேப்-ஐ கிளிக் செய்யவும். இப்போது ஸ்க்ரீனின் கீழ் வலது மூலையில் உள்ள பேனா (Pen) ஐகானை கிளிக் செய்யவும். பின்னர் கீழ்தோன்றும் மைக்ரோஃபோன் ஐகானை லாங் பிரஸ்செய்து உங்கள் குரலை பதிவுசெய்யவும். பேசி முடித்ததும் அந்த ஐகானை 'ஹோல்ட்' செய்வதை நிறுத்தவும். பின்னர் எல்லாம் சரியாக பதிவாகி உள்ளதா என்பதை ப்ரிவியூ வழியாக சரிபார்க்கவும்

  MORE
  GALLERIES

 • 66

  வாய்ஸ் நோட்டை WhatsApp ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி...? தெரிந்துகொள்வோம்..!

  கடைசியாக, நீங்கள் ரெக்கார்ட் செய்த வாய்ஸ் நோட்-ஐ வாய்ஸ் ஸ்டேட்டஸ் ஆக செட் செய்ய சென்ட் பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். இப்போது உங்கள் வாட்ஸ்அப் வட்டத்தில் உள்ள அனைவராலும் உங்கள் வாய்ஸ் ஸ்டேட்டஸை பார்க்கவும் / கேட்கவும் முடியும். அதோடு அதற்கு ரிப்ளை மற்றும் ரியாக்ட் செய்யவும் முடியும். இனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை வாய் நோட்டாக மாற்றி ஸ்டேட்டசாக வைத்து அசத்துங்கள்…

  MORE
  GALLERIES