முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

How to Select a table Fan : நீங்கள் டேபிள் ஃபேன் வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

  • 110

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    ஏர் கூலர், ஏசி வாங்க முடியாத சிலர் கோடைக் காலத்திலும் மின்விசிறியை வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக டேபிள் ஃபேன் பெரும்பாலானோர்களின் தேர்வாக உள்ளது. அப்படி இந்த கோடைக்கு நீங்கள் டேபிள் ஃபேன் வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 210

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    ஃபேன் இறக்கை
    டேபிள் ஃபேன் இடங்களுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். சிறிய அறையில் சிறிய ஃபேனே போதுமானது. சராசரியாக இறக்கைகளில் சுழலும் விட்டம் 40செமீ முதல் 45 செமீ வரை இருக்கலாம். பெரிய இடம் என்றால் பெரிய ஃபேனை தேர்ந்தெடுக்கலாம்

    MORE
    GALLERIES

  • 310

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    சுழலும் திறன்
    டேபிள் ஃபேனில் முக்கியமான ஒன்றே சுழலும் திறன் தான். அதிக இடத்துக்கு காற்றை தள்ள வேண்டும் என்றால் ஃபேன் சுழற்சியில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஃபேன் 60டிகிரி சுழக வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 410

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    காற்றின் அளவு
    டேபிள் ஃபேனின் காற்றின் அளவை CMM (Cubic Meter Per Minute) என்ற கணக்கிடுவார்கள். ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு காற்றை தள்ளும் என்பதன் அளவு இது. அறைக்குள் இருக்கும் ஃபேன் 60 முதல் 100cmm அளவு கொண்டிருக்க வேண்டும்

    MORE
    GALLERIES

  • 510

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    சத்தம்
    டேபிள் ஃபேன் நமது பக்கத்திலே கூட இருக்கலாம். அதனால் அதன் சத்தம் மிக முக்கியம். அதிக சத்தம் என்றால் அது நமக்கே எரிச்சலை உண்டாக்கும். இரவு நேரங்களில் தொல்லையாக இருக்கும். அதனால் சத்தம் குறைவாக ஃபேனை தேர்ந்தெடுக்க வேண்டும்

    MORE
    GALLERIES

  • 610

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    மின்சாரம்
    டேபிள் ஃபேன் என வந்துவிட்டாலே கிட்டத்தட்ட ஓய்வின்றி ஓடும் நிலையில் தான் இருக்கும். அதனால் நீங்கள் வாங்கும் ஃபேன் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தும் என தெரிந்துகொள்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 710

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    மோட்டார்
    ஒரு ஃபேனின் இதயமே மோட்டார்தான். ஓய்வின்றி உழைக்கவுள்ள உங்கள் ஃபேனின் மோட்டார் திறனை கடைகளில் கேட்டு அதற்கேற்ப புதிய ஃபேன் வாங்குங்கள்

    MORE
    GALLERIES

  • 810

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    உறுதித்தன்மை
    இப்போது வரும் டேபிள் ஃபேன்களின் இறக்கை பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன. துரு பிடிக்காது, எடை குறைவு என பல காரணங்களால் மக்களும் பிளாஸ்டிக் இறக்கை ஃபேனையே விரும்புகின்றனர். ஆனால் உறுதியில் பார்த்தால் பிளாஸ்டிக்கை விட உலோக இறக்கைகளே சிறந்தது. எனவே உங்களின் தேவை என்ன, துருபிடிக்கும் வாய்ப்பு உங்கள் வீட்டில் இருக்கிறதா, அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க முடியுமா என்ற பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக்கொண்டு எந்த பேன் என்பதை உறுதி செய்யவும்

    MORE
    GALLERIES

  • 910

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    உயரம்
    நீங்கள் எந்த தேவைக்கு டேபிள் ஃபேன் வாங்க உள்ளீர்கள் என்பதை முதலில் உறுதி செய்யவும். தரையில் அமர்ந்தோ படுத்தோ இருப்பவர்களுத்தான் இந்த ஃபேன் உயரம் குறைந்த பேசிக்மாடல் ஃபேன் போதுமானது. அல்லது சோபா, பெட் போன்ற இடங்களுக்கு உயரத்தை ஏற்றி இறக்கும் வசதிகொண்ட ஃபேனை தேர்வு செய்யலாம்

    MORE
    GALLERIES

  • 1010

    சிலு சிலு காற்றுக்கு டேபிள் ஃபேன் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க!

    மற்ற வசதிகள்
    இதுபோக எந்த நிறுவனம், விலை என்ன, ரிமோட் வசதி உண்டா, பேட்டரியில் இயங்குமா போன்ற பல எக்ஸ்ட்ரா வசதிகளை தெரிந்துகொண்டு உங்களின் தேவைக்கேற்ப ஃபேனை தேர்வு செய்யுங்கள்

    MORE
    GALLERIES