இன்று உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்தும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் வாட்ஸ்அப். பல கோடி பயனர்களை கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். இது மிக முக்கியமான சமூகவலைதளம் என்பதால் சாமானியர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் யாரிடமும் இந்த செயலி இல்லாமல் இருக்காது. புதிதாக ஆண்ட்ராய்டு போனை ஒருவர் வாங்கிய உடனேயே அவர் தரவிறக்கம் செய்யும் முதல் செயலி இதுவாகத்தான் இருக்கும். அந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது வாட்ஸ்அப் செயலி.
நமக்கு மட்டுமே டெலிட் செய்யும் வகையில் டெலிட் மி என்ற ஆப்சனும், இருவருக்கும் டெலிட் செய்யும் வகையில் டெலிட் ஃபார் எவ்ரி ஒன் என்ற ஆப்சனும் உள்ளது. இவற்றை பயன்படுத்தி செய்திகளை டெலிட் செய்து கொள்ளலாம். அப்படி நமக்கு அனுப்பி டெலிட் செய்யப்பட்ட செய்திகளை மீண்டும் நம்மால் படிக்க முடியும். இதற்கு ஆண்ட்ராய்டு 11 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்சன் கொண்ட ஸ்மார்ட் போன் நம்மிடம் இருக்க வேண்டும். தேர்ட் பார்ட்டி செயலிகளை நிறுவத் தேவையில்லை. ஆண்ட்ராய்டிலேயே இதற்கான ஆப்சன் இருக்கிறது.
உங்கள் ஸ்மார்ட் போனில் செட்டிங் ஓபன் செய்து ஆப்ஸ்&நோட்டிஃபிகேசன் விருப்பத்தை தெரிவு செய்யவும். நோட்டிஃபிகேசன் என்பதை கிளிக் செய்து, அதில் நோட்டிபிகேசன் ஹிஸ்டரி என்ற பட்டனை அழுத்தவும். – பிறகு, யூஸ் நோட்டிஃபிகேசன் ஹிஸ்டரி என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் போனில் வரும் அனைத்து நோட்டிபிகேஷன்கள் - வாட்ஸ்அப் மெசேஜ்ஜஸ் உட்பட, அனைத்தும் இந்த பக்கத்தில் தோன்றும். இதன் மூலம் மீண்டும் அந்த மெசேஜை நீங்கள் படித்துக்கொள்ளலாம். இந்த எளிய செயல்முறையை இப்போது செய்து விடுங்கள். பிறகு யாரும் உங்களிடம் இருந்து தப்ப முடியாது.