ஸ்மார்ட்போன் குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல், அதிகபட்சம் 500முறை வரை சார்ஜ் செய்யப்படும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரி அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை எட்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும். இதன் விளைவாக பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே போகும். சில நேரங்களில் பேட்டரி பாதிப்படைந்து வெடிக்கக் கூட செய்யலாம்.
பொதுவாக பேட்டரிக்குள் அழுத்தம் அல்லது வெப்பம் அதிகமானால் பேட்டரி வெடிக்கும். ஆனால் செல்போன் நிறுவனங்கள் முடிந்தவரை அதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவண்ணமே செல்போன்களை தயாரிக்கின்றன. அதையும் மீறி நடக்கும் சில விபத்துக்குகளுக்கு பேட்டரியே காரணம். அப்படி ஏதேனும் பேட்டரி பிரச்னை என்றாலும் அதனை நாம் சில எச்சரிக்கைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.