சாம்சங் கேலக்ஸி S22 அல்ட்ரா (Samsung Galaxy S22 Ultra): இந்த மொபைல் 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த சாம்சங் மொபைல் 4NM Qualcomm Snapdragon 8 Gen 1 octa-core ப்ராசஸரை கொண்டுள்ளது. இந்த மொபைல் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் நீடிக்கும் சக்தி கொண்ட 5000 mAh பேட்டரி மற்றும் 45W பவர் அடாப்டர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த மொபைல் குவாட் HD + ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 6.8 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது பில்ட்-இந்த எஸ் பென்னுடன் வருகிறது. தரமான போட்டோக்களை எடுக்க 100x டிஜிட்டல் ஜூம் பொருத்தப்பட்ட கேலக்ஸி S22 அல்ட்ரா குவாட்-கேமரா செட்டப் உதவும். இந்த மொபில் 3 கலர் ஆப்ஷன்களில் ரூ.1,34,999 விலையில் கிடைக்கிறது.
ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3):iOS 15 உடன் வரும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மொபைல் ஒரு தடையற்ற யூஸர் அனுபவத்தை வழங்குகிறது. மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் வருகிறது iPhone SE 3. இந்த மொபைல் 4.7 இன்ச் டிஸ்பிளே மற்றும் ஒரு ஏரோஸ்பேஸ் குவாலிட்டி அலுமினியம் மற்றும் கிளாஸ் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸிற்கு எதிராக IP67 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த மொபைல் வயர்லெஸ் சார்ஜிங் க்கான QI- சான்றளிக்கப்பட்ட சார்ஜர்களுடன் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட்டை கொண்டுள்ளது. இந்த ஐபோன் 12 MP வைட் கேமராவை கொண்டுள்ளது. 64GB, 128GB, மற்றும் 256GB வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த மொபைலின் ஆரம்ப விலை ரூ.43,900.
சியோமி 11டி ப்ரோ 5ஜி (Xiaomi 11T Pro 5G): இந்த மொபைல் Qualcomm Snapdragon 888 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இது 6.67-இன்ச் AMOLED HDR 10+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் 120w ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியுடன் வருகிறது. 108MP ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ள இந்த மொபைல் செலஸ்டியல் ப்ளூ, மூன்லைட் ஒயிட் மற்றும் மியூட்டரைட் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் ரூ.39,999 முதல் கிடைக்கிறது.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (iPhone 13 Pro Max): இந்த போன் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் ப்ராசஸர், 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட கேமரா செட்டப் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இந்த போன் 128GB, 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சியரா ப்ளூ, கிராஃபைட், கோல்ட், சில்வர், ஆல்பைன் கிரீன் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த போன் ரூ.1,19,900 முதல் கிடைக்கிறது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 Pro): ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 ஆக்டா கோர் ப்ராசஸராய் கொண்டுள்ள இந்த மொபைல் பேப்பர் டெக் மாஸ்டர் டிசைனுடன் வருகிறது. இது 8GB மற்றும் 12GB ரேம் வேரியன்ட்கள், இதேபோல் 128GB மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 50MP + 50MP பிரைமரி கேமரா செட்டப் உள்ளது. பேப்பர் க்ரீன், பேப்பர் வைல் மற்றும் ஸ்டீல் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.49,999 என்பதிலிருந்து துவங்குகிறது.