முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

Google Pixel 7a ஸ்மார்ட் ஃபோனின் கலர் வேரியேஷன் பற்றிய ஆன்லைன் அறிக்கைகள் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டிற்கு முன்னதாக வெளிவந்துள்ளன.

  • 17

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் வரும் மே 10, 2023-ல் I/O டெவலப்பர் மாநாடு அமெரிக்காவில் நடைபெறும் என்று உறுதிபடுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட் ஃபோனான Google Pixel 7a -வை அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    இதற்கிடையே இந்த Google Pixel 7a ஸ்மார்ட் ஃபோனின் கலர் வேரியேஷன் பற்றிய ஆன்லைன் அறிக்கைகள் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டிற்கு முன்னதாக வெளிவந்துள்ளன. பிரபல லீக்கர் பராஸ் குக்லானியின் கூற்றுப்படி, வரவிருக்கும் Google Pixel 7a மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் வரலாம். விவிட் உபே, மயோ கிரீம், டைட் ஆரஞ்சு, கிரிஸ்பி காலே மற்றும் டினுகுவான் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்கள் இதில் அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 37

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    Google Pixel 7a ஸ்மார்ட் ஃபோனின் 256GB ஸ்டோரேஜ் எடிஷன் கிடைக்கும் என்றும் தகவல் கூறுகிறது. புதிய Pixel 7a மொபைலில்க் Google Tensor G2 ப்ராசஸர் கொடுக்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புதிய மொபைலில் 6.1-இன்ச் முழு HD+ OLED ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    மேலும் இந்த வரவிருக்கும் Google Pixel 7a மொபைலில் 90Hz ரெஃப்ரஷ் ரேட் கொடுக்கப்பட்டிருக்கலாம். தவிர ஆன்லனில் பரவி வரும் தகவல்களில் அடிப்படையில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபோனின் நடுவில் பஞ்ச்-ஹோல் கேமரா கட்அவுட்டுடன் ஃபிளாட்-ஸ்கிரீன் இருக்கலாம். மேலும் ஆன்லைனில் லீக்காகி இருக்கும் தகவலின்படி கூகுள் பிக்சல் 7a-வில் சிறப்பான ஃபோட்டோ எடுப்பதற்காக பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    மேலும் இந்த டிவைஸின் பின்பக்கத்தில் 12MP அல்ட்ரா-வைட் கேமரா சென்சார், 64MP Sony IMX787 சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, கூகுள் பிக்சல் 7ஏ மொபைலானது 12MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கூகுளின் இந்த 5ஜி மொபைல் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    Pixel 7a மொபைலானது $450 மற்றும் $500 ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 37,100 முதல் ரூ. 41,200) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவு விலையில் கிடைக்கும் கூகுளின் பிக்சல் ஏ சீரிஸ் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கடந்த காலத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தாமல் சில ஃபோன்களை தவிர்த்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    அடுத்த மாதம் அமெரிக்காவில் அறிமுகமாகிறதா புதிய Google Pixel 7a.! அம்சங்கள் மற்றும் விலை என்ன?

    ஆனால் நிறுவனம் Pixel 5a-வை தவிர Pixel A சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சமீபத்திய டிவைஸ்களையும் இந்தியாவில் வெளியிட்டது. Pixel 6a ஆனது இந்தியாவில் சற்று அதிக விலையில் அறிவிக்கப்பட்டது, இது பல பிக்சல் போன் ரசிகர்களை ஏமாற்றியது. இருப்பினும் இந்த மொபைலின் விலை சில மாதங்களுக்கு பிறகு பெரிய அளவில் குறைந்துள்ளது. மொத்தத்தில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது புதிய Pixel 7a மொபைலை இந்த ஆண்டு கட்டாயம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES