முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » 3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

புதிய அப்டேட்டின் படி கூகுளானது, தனது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதன் ஸ்ட்ரீட் வியூ வசதி மற்றும் ஏரியல் படங்களின் உதவியை கொண்டு, அவற்றை ஒன்றாக இணைத்து முப்பரிமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

 • 16

  3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

  கூகுள் மேப்ஸ் என அழைக்கப்படும் கூகுளால் தயாரிக்கப்பட்ட வரைபட செயலியானது தினம் தோறும் பல லட்சக்கணக்கான மக்களால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வரை அதில் புதுப்புது வசதிகளை சேர்த்து வரும் கூகுள் ஆனது புதியதோர் புரட்சியாக கூகுள் மேப்ஸ் வழியாகவே முப்பரிமான அனுபவத்தை அளிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

  தற்போதைய நிலவரப்படி முதல் கட்டமாக உலகம் முழுவதும் உள்ள 15 நகரங்களில் முதல் கட்டமாக இந்த வசதியானது அமல்படுத்தப்படும். அதற்குப் பின்னர் அனைவருக்கும் படிப்படியாக இந்த வசதியானது அளிக்கப்படும். இந்த புதிய முப்பரிமான கூகுள் மேப்பில் போக்குவரத்து பற்றிய தகவல்கள், பார்க்கிங் வசதி பற்றிய குறிப்புகள், சிக்கலான வளைவுகள் போன்ற அனைத்து தகவல்களும் யூசருக்கு அளிக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

  கூகுளில் அறிவிப்பின்படி ஆம்ஸ்டர் டாம், பெர்லின், டப்லின், புளோரன்ஸ், லாஸ் எஞ்சலஸ், லண்டன், லாஸ் வேகாஸ், மியாமி, நியூ யோர்க், பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ், டோக்கியோ, சீட்டில், வெனிஸ் ஆகிய நகரங்களில் இந்த முப்பரிமாண கூகுள் மேப் வசதியானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதலங்களிலுமே எந்த முப்பரிமான கூகுள் மேப்பை யூசெர்களால் பயன்படுத்தப்பட முடியும். மேலும் வாகனம் ஒட்டி கொண்டிருக்கும் போதே இந்த மேப்பை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 46

  3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

  இந்த புதிய அப்டேட்டின் படி கூகுளானது, தனது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதன் ஸ்ட்ரீட் வியூ வசதி மற்றும் ஏரியல் படங்களின் உதவியை கொண்டு, அவற்றை ஒன்றாக இணைத்து முப்பரிமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர் இருக்கும் இடத்தை பொறுத்து கூகுள் ஆனது தனது முப்பரிமாண அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இதில் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்கள், பைக் லேன்ஸ், நடைபாதைகள் வளைவுகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

  இதைப் பற்றி பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் கூறுகையில், “தினந்தோறும் கூகுள் மேப்பில் மூலம் 20 பில்லியன் கிலோமீட்டர் பயணங்களை மக்கள் ஒட்டுமொத்தமாக மேற்கொள்கின்றனர். இது நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிக அதிக பயணங்கள் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 66

  3D அனுபவத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸ்..! 15 நகரங்களில் அறிமுகம்..

  உங்களது ஒட்டுமொத்த பயணத்தையும் உங்களால் முன்னரே பார்க்க முடியும் என்றால் அது எப்படி இருக்கும் என்பதை பற்றி நினைத்து பாருங்கள். இந்த முப்பரிமான வசதியின் மூலம் உங்களால் அந்த அனுபவத்தை பெற முடியும். நீங்கள் வாக்கிங் சென்றாலும் சைக்கிளிங் சென்றாலும் அல்லது டிரைவிங்கில் இருந்தாலும் கூட உங்களால் இந்த வசதியை பயன்படுத்த முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES