உலகின் முன்னணி சர்ச் இன்ஜினான கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபாரன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். 2023 ம் ஆண்டுக்கான கூகுள் I/O நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றறது. இந்த நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும். அதே போல இந்த ஆண்டும் இது உலகளவில் மிகப்பெரிய முக்கியமான கான்ஃபரன்ஸ் ஆக கவனிக்கப்பட்டது. 2 மணி நேரம் நடந்த இந்த நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
இனி காத்திருக்க வேண்டாம் – Bard இன் அதிகாரபூர்வமான அறிமுகம் : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் யாரும் எதிர்பாராத சமயத்தில் தன்னுடைய செயற்கை நுண்ணறிவு கருவியான chatgptஐ அறிமுகம் செய்து அது உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டது. Chatgpt ஆல் என்ன செய்ய முடியும் என்பது பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வந்தவண்ணம் நிலையில், கூகுள் நிறுவனத்தின் ai பற்றி எந்த தகவலும் சரியாக வெளியாகவில்லை, எப்போது தான் அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒருவழியாக இந்த கான்ஃபரன்ஸ்ஸில் கூகுள் தனது அதிகாரப்பூர்வமான செயற்கை நுண்ணறிவுக் கருவியான Bard அறிமுகம் செய்தது.
அட்வான்ஸ்டு வொர்க்ஸ்பேஸ் : கூகுளின் பல்வேறு சேவைகள், ai அறிமுகம் மூலம், மேம்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் ஒன்று தான் கூகுள் வொர்க்ஸ்பேஸ். கூகுள் வொர்க்ஸ்பேசில் தற்போது இருக்கும் அம்சங்கள் அட்வான்ஸ்டாக பயன்படுத்த முடியும். கூகுள் ஷீட்ஸ், ஸ்லைடுகள், மீட் என்று எல்லாவற்றிலுமே ai இணைக்கப்படும்.
PaLM 2 – புதிய லாங்குவேஜ் மாடல் : உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவுடன் உதவியுடன் பெரும்பாலான சேவைகள் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் கிடைக்கும் படி பல நிறுவனங்கள் பின்னணியில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின், புத்தம் புதிய மற்றும் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடலாக PaLM 2 என்பது இந்த நிகழ்வில் அறிமுகம் ஆனது. இந்த மாடல், கூகுள் ai ஆன Bard சாட் கருவியுடன் இணைக்கப்படும். Chatgptக்குப் போட்டியாக இது செயல்படும் என்று கூறப்படுகிறது.
மியூசிக்LM – பாடல்கள் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி : நாம் பேச பேச அது வார்த்தைகளாக, வாக்கியங்களாக திரையில் தோன்றும் வாய்ஸ் டு டெக்ஸ்ட் (Voice to text) அம்சம் போலவே, கூகுள் சுவாரஸ்யமான ai கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. MusicLM என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த ai கருவி, நாம் உள்ளிடும் textஐ மியூசிக்காக மாற்றும். உதாரணமாக நீங்கள் ஒரு பார்ட்டி அளிக்கிறீர்கள் என்றால், அதற்கு ‘பெப்பியான’ இசை வேண்டும் என்று உள்ளிட்டால், இந்த கருவியே உங்களுக்காக பல்வேறு வெர்ஷன் பாடல்களை தயார் செய்துவிடும்.
கூகுள் மேப்ஸ் : “ரூட்களுக்கான இம்மர்சிவ் வியூ” என்ற ஒரு புதிய அம்சத்தை குறிப்பிட்ட சில நகரங்களில் கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், ஒரு இடத்திற்கு எப்படி செய்வது என்பது மட்டுமல்லாமல், அதைப் பற்றிய முழு தகவல்களும் வழங்கப்படும். உதாரணமாக, பார்க்கிங், காம்ப்ளக்ஸ் ஆன இன்டர்செக்ஷன்கள், பைக் லேன், போக்குவரத்து, சாலை நிலவரங்கள் என்று அனைத்து விவரங்களையும் அறியலாம்.
மேஜிக் கம்போசர் மற்றும் எடிட்டர் : எவ்வளவோ இமேஜ் எடிட்டிங் ஸாஃப்ட்வேர்கள் வந்துவிட்டன. சமீபகாலமாக, ai தொழில்நுட்பத்துடன் நாம் விரும்பும் வகையில் எப்படி வேண்டுமானாலும் புகைப்படங்களை உருவாக்கலாம் மற்றும் எடிட் செய்து கொள்ளலாம். கூகுள் தனது கான்ஃபாரன்சில், மேஜிக் எடிட்டர் அம்சத்தை ai தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது. இதன் மூலம், நீங்கள் புகைப்படத்தின் பின்னணியை மேம்படுத்தலாம் / மாற்றலாம், ஃபிரேமை மேம்படுத்தலாம், புகைப்படத்தில் இருக்கும் சிலவற்றை நீக்கலாம் உள்ளிட்டவை அடங்கும்.
கூகுள் தேடலில் இரண்டு புதிய அம்சங்கள் : கூகுள் என்றாலே கூகுள் சர்ச் தான் முதலில் நினைவுக்கு வரும். சர்ச் என்ஜினில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வரும் கூகிள் இந்த ஆண்டு கான்ஃபரன்ஸில் இரண்டு முக்கிய அம்சங்களை கூகுள் தேடலில் சேர்த்திருக்கிறது. ஏற்கனவே சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் தேடு பொறியில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்பட்டு அவை பல யூசர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூகுள் தனது தேடுபொறியில் எந்த அம்சங்களை கொண்டு வரப்போகிறது என்று பலரும் ஆர்வமாக காத்திருந்தனர்.
கூகுள் சேர்ச்சில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய இரண்டு அம்சங்களில் யூசர்கள் தேடல் பற்றிய content அதாவது உள்ளடக்கம் மற்றும் ஒரு புகைப்படத்தின் காண்டக்ஸ்ட், அதாவது அது எதைச் சார்ந்தது என்பதை பற்றிய மேம்பட்ட புரிதல் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் ஒரு புகைப்படத்தை தேடினால், காண்பிக்கப்படும் முடிவுகளில் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது, அதைப் பற்றிய தகவலும் அதில் காண்பிக்கப்படும். மேலும், செயற்கை நுண்ணறிவு கருவிகளால் உருவாக்கப்படும் படங்களில், இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்ற லேபிளும் இணைக்கப்படும். இதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு இருக்கிறது என்று கான்ஃபரன்ஸில் தகவல் அளிக்கப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் கூகுள் தேடுபொறியில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் கான்வெர்சேஷன் மோடு (ai-powered conversational mode) என்ற ஒரு புதிய அம்சத்தையும் கூகுள் தற்போது சோதனை செய்து வருகிறது என்று டெவலப்பர் கான்ஃபரன்ஸ்ஸில் தெரிவிக்கப் பட்டது. குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஒரு யூசர் தேடும் பொழுது, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை ‘பரிந்துரைக்கப்பட்ட ஸ்டெப்ஸ்’ என்று யூசர்கள் காண்பார்கள். மற்றும் தேடப்பட்ட விஷயம் பற்றிய எல்லா முக்கியமான தகவல்களையும் ஸ்னாப்ஷாட் போல ai கருவி காண்பிக்கும்.இதில் பரிந்துரைக்கப்படும் அடுத்தடுத்த ஸ்டெப்ஸ் என்பதை தேர்வு உங்களுக்கு புதிய கான்வெர்சேஷனல் மோடு என்ற அம்சத்திற்கு செல்வீர்கள்.
அது மட்டுமில்லாமல், நீங்கள் எதைப்பற்றி தேடுகிறீர்களோ அது பற்றி கூகுளிடம் கூடுதல் விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு கேள்விகள் கேட்கலாம். ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனி பதிலாக இந்த கான்வர்சேஷனல் மோடு செயல்படும்.அடுத்ததாக, perspective filter, அதாவது கண்ணோட்டம் என்ற ஒரு புதிய ஃபில்டர்ஒன்று சேர்க்கப்பட இருக்கிறது. பொதுவாக ஒரு இடத்திற்கு கூகுள் மேப்ஸ், மருத்துவமனை அல்லது ஏதேனும் ஒரு உணவகம் என்று தேடும் போது, அந்த இடம் பற்றி ஏற்கனவே ரிவ்யூக்கள் அல்லது மதிப்பீடுகள் இருக்கும். அந்த மதிப்பீடுகள் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதேபோல கூகுளில் நீங்கள் ஒரு விஷயத்தை தேடினால், அதைப் பற்றி ஏற்கனவே தேடி இருக்கும் யூசர்களின் அனுபவங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
Find my device மொபைல் யூசர்களின் பாதுகாப்பிற்காக ஃபைன்ட் மை டிவைஸ் என்ற அமசத்தை ஏற்கனவே கூகுள் அறிமுகம் செய்திருந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் air-tag மற்றும் வேறு சில அம்சங்களுடன், alertகளை பெறலாம். தற்போது, கூகுள் இதில் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. உங்களுக்கு தெரியாத டிராக்கர்கள் யாரும் உங்களுடன் பயணம் செய்கிறார்களா, அல்லது உடன் வருகிறார்களா மற்றும் நீங்கள் அறிந்திராத ப்ளூடூத் கனக்டிவிட்டி டிராக்டர்கள் இருக்கிறதா உள்ளிட்டவற்றை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பிக்சல் 7a : கூகுள் பிக்ஸல் 7a எப்போது அறிமுகமாகும் என்று பிக்சல் அடுத்த அப்டேட் வெளிவரப் போகும் தகவல் கசிந்ததிலிருந்து எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த டெவலப்பர் கான்ஃபரன்ஸ்ஸில் கூகுள் பிக்சல் 7a அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் உறுதியான நிலையில் கூகுள் பிக்சல் 7 மற்றும் அதற்கு முந்தைய சீரிஸான 6 ஆகியவை விலை குறைக்கப்பட்டு ஈ-காமர்ஸ் தளங்களில் விற்பனை ஆகின.
கூகுள் பிக்ஸல் 7a மே மாதம் 11ஆம் தேதி, பிக்சர் 7ஐ விட $100 குறைவாக விற்பனைக்கு அறிமுகமானது. Pixel 6a போலவே, இந்த 7a மாடலிலும் 6.1 இன்ச் ஸ்க்ரீன் இருக்கிறது. இது பிக்சல் 7 உடன் ஒப்பிடும் போது ஸ்க்ரீன் அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கிறது. பிக்சல் 7 மாடலுடன் ஒப்பிடும் போது இதில், நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் ஜூம் இல்லை, ஆனால் இதன் கேமராக்கள் அற்புதமாக இருக்கிறது என்று பரவலாக கூறப்படுகிறது.
கூகுள் வியர் Os : இந்த கான்பிரன்ஸ்ல் கூகுள் தனது ஸ்மார்ட்வாட்ச் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த வெர்ஷனான wear Os 4ஐ அறிமுகம் செய்துள்ளது. பேட்டரி லைஃப், அக்சஸபிலிடி அம்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஃபன்க்ஷனாலிட்டி ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மொபைல் மற்றும் கணினிகளில் இருப்பது போல டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் என்ற அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த OSக்கான வாட்ச் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பிக்சல் டேப்லட் : பிக்சல் ஃபோன்களின் வெற்றியைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் பிக்சல் டேப்லட் பற்றிய தகவல் வெளியானது. இதன் அம்சமும், இன்டர்ஃபேஸும், பெரிய அளவிலான நெஸ்ட் ஹோம் ஹப் போலவே இருக்கிறது. இது டேப்லட் மட்டுமல்ல, இதனை ஒரு ஸ்மார்ட் ஹோம் டிவைசாகவும், வீடியோ ஸ்ட்ரீமிங் கருவியாகவும், டெலிகான்பாரன்சிங் சாதனமாகவும் பயன்படுத்தலாம்.மேலும், கூகுள் பிளேஸ்டோரில் ஆப் டெவலப்பர்கள் ai கருவியைப் பயன்படுத்தி தங்களின் ஆண்ட்ராய்டு ஆப்சை மேம்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Help Me Write:
’ஹெல்ப் மி ரைட்’ அம்சம். AI உதவியுடன் இந்த அம்சம் செயல்படும். இது நமது வேலைகளை மிகவும் சுலபமாக்கிவிடும்.
உதாரணத்திற்கு, நீங்கள் பயணம் செய்ய இருந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கான வவுச்சருடன் உங்களுக்கு ஒரு இ-மெயில் வருகிறது. அதற்கு நீங்கள் பதில் மெயில் அனுப்ப வேண்டும். விமான நிறுவனம் உங்களுக்கு அளித்திருக்கும் சலுகைக்கு மாறாக வேறு ஒன்று விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு வந்த இ-மெயிலை மேற்கோள் காட்டி, உங்கள் விருப்பத்தையும் பதிவு செய்தால் போதும். உங்கள் விருப்பத்தோடு உங்களுக்கான பதில் மெயிலை ஹெல்ப் மி ரைட்-டே எழுதி விடும்.