சமீபத்தில் சோஷியல் மீடியாவில் இது தொடர்பான டீஸரை ரிலீஸ் செய்த கூகுள் நிறுவனம், அதன் மூலம் அடுத்த வார தொடக்கத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு Google Pixel 7a அறிமுகப்படுத்தப்படும் என்பதை சூசகமாக உறுதி செய்திருக்கிறது. வரும் மே 11-ஆம் தேதி ஒரு புதிய பிக்சல் ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும், அது Flipkart மூலம் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் டெக் நிறுவனமான கூகுள் ட்விட்டரில் ஷேர் செய்த டீஸர் மூலம் வெளிப்படுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனம் மொபைலின் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும் டீஸர் படமும் லாஞ்ச் டைம்லைனும் Pixel 7a விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதை வெளிப்படுத்துகின்றன. கூகுள் ஷேர் செய்துள்ள அதிகாரப்பூர்வ படம், Pixel a மற்றும் ஃபிளாக்ஷிப் போன்களில் நாம் பார்க்கும் டிசைனை காட்டுகிறது. Pixel 7a-வை மே 10 அன்று நடைபெறும் நிகழ்வில் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.
அறிமுகப்படுத்தப்பட உள்ள அடுத்த நாளே இந்த டிவைஸை இந்திய சந்தையில் கூகுள் கிடைக்க செய்வது பிக்சல் யூஸர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிக்சல் 7a மொபைலின் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் மற்றும் டிசைனை பற்றி பல தகவல்கள் கசிந்த சில நாட்களுக்குப் பிறகு இப்போது அதிகாரப்பூர்வ டீஸர் வந்துள்ளது. சமீபத்திய டீஸர் இமேஜின்படி, Pixel 7a பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப்பை தக்க வைத்து கொள்கிறது.
பேக் பேனலில் தொடர்ந்து Horizontal கேமரா மாட்யூல் இருக்கும். இது பல பிக்சல் ஃபோன்களில் நாம் ஏற்கனவே பார்த்த வடிவமைப்பாகும். பழைய வடிவமைப்பு சாதகமாக மற்றும் யூஸர்களை ஈர்ப்பதாக இருப்பதால், கூகுள் டிசைனில் மாற்றத்தை தவிர்ப்பதாக தெரிகிறது. பிரபல லீக்கரான SnoopyTech, ஷேர் செய்துள்ள ஃபோட்டோக்களானது, புதிய Pixel 7a மொபைலானது 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட பிக்சல் 7a டூயல் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
இதன் ரீடெயில் பாக்ஸ் பேக்கேஜிங் Pixel 7 மற்றும் Pixel 7 Pro-வை போலவே பாக்ஸில் சார்ஜிங் அடாப்டரை கொண்டிருக்காது என தெரிகிறது.புதிய Pixel a series ஃபோன்களை காட்சிப்படுத்த கூகுள் I/O பிளாட்ஃபார்மை பயன்படுத்துகிறது. கடந்த 2019-ல் Google I/O நிகழ்ச்சியில் முதல்முறையாக Pixel 3a மற்றும் 3a XL அறிமுகமானது. இப்போது 4 ஆண்டுகளுக்கு பின் Pixel 7a இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Pixel 7a-வை தவிர Googleன் I/O 2023 நிகழ்வில் Pixel Fold மற்றும் Pixel Tablet-ம் அறிமுகப்படுத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 11-ஆம் தேதி Flipkart வழியே விற்பனைக்கு வரும் Google Pixel 7a-வின் விலை சுமார் ரூ.45,000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களின்படி இந்த ஸ்மார்ட் போன் பிளாக், ஒயிட் மற்றும் கோரல் உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.