1. பழைய கேஜெட்களை மீண்டும் பயன்படுத்துதல்:
கையில் இருப்பது பழசாகிவிட்டது, புது அப்டேட் வந்துவிட்டது என்பதற்காக நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் கேஜெட்களை தூக்கி எரிந்துவிட்டு, புதிய பொருட்களை வாங்காதீர்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மொபைலை மாற்றும் பழக்கம் உங்களுக்கு இருக்கலாம் ஆனால் உங்களிடம் உள்ள ஒன்று சரியாக வேலை செய்யும் போது அது உண்மையில் அவசியமில்லாதது. உங்கள் ஸ்மார்ட் போனில் நிஜமாகவே ஏதேனும் சில பிரச்சனைகள் இருந்தால், அதனை மியூசிக் பிளேயர், பேபி மானிட்டர், செக்யூரிட்டி கேமரா போன்ற வேறு சில விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். உங்களிடம் பழைய லேப்டாப் இருந்தால், அதை வீட்டில் உள்ள பெரியவர் அல்லது தொழில்நுட்பத்தில் புதிய மற்றும் அதன் அடிப்படைகளை அறிய விரும்பும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
2. பழைய கேஜெட்களை முறையாக அப்புறப்படுத்துதல்:
உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் பழுதாகிவிட்டது, அதனை சரி செய்ய வழியே இல்லை என்ற நிலைக்குச் சென்றுவிட்டது என்றால், கொஞ்சமும் யோசிக்காமல் அதனை முறையான வழியில் அப்புறப்படுத்துங்கள். அதாவது அந்த பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்பிவையுங்கள். இதனால் மின்கழிவுகளால் மூச்சுவிட முடியாமல் திணறும் பூமித்தாய்க்கு நீங்களும் சிறிய அளவில் உதவலாம்.
3. எக்கோ ஃப்ரெண்ட்லி பேக்கேஜ்:
புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம், குறைந்த பட்சம் எக்கோ ஃப்ரெண்ட்லி பேக்கேஜ் கொண்ட பொருட்களை வாங்குங்கள். ஏனென்றால் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகளைக் கொண்டு எளிதில் மக்க கூடிய பேக்கேஜ் உருவாக்கப்படுகிறது. ஆன்லைன் தளத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்கிறீர்கள் என்றால், மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேக்கேஜிங்கில் தயாரிப்புகளைப் அனுப்பி வைக்கும் படி கோரிக்கை வைக்கலாம்.
4. டிஜிட்டல் முறைக்கு மாறுங்கள்:
டிஜிட்டல் முறைக்கு மாறுவது என்பது பேனாவையும், பேப்பரையும் தூக்கி வீசிவிட்டு வருவது கிடையாது. புத்தகங்களை படிப்பவர்களும், கதை, கவிதைகள் போன்றவற்றை எழுதுபவர்களும் எப்போதும் அதனை செய்ய முடியாது. ஆனால் அன்றாட தேவைக்காக ஏதாவது சிறிய குறிப்புகளை எழுதுவது, மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்க லிஸ்ட் போடுவது, குடும்பத்தினருக்கான வேலைகளை நினைவுபடுத்தும் குறிப்புகளை ஒட்டுவது போன்றவற்றை டிஜிட்டல் முறையில் செய்யலாம். இதற்கு காகிதம் மற்றும் பேனாவை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒரு குறுஞ்செய்தி மூலமாக வேலையை கச்சிதமாக முடித்துவிடலாம்.
5. எக்கோ ஃப்ரெண்ட்லி ஏசி, ப்ரிட்ஜ்கள்:
ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய குளோரோபுளோரோகார்பன்கள் (CFCகள்), ஹைட்ரோகுளோரோபுளோரோகார்பன்கள் (HCFCகள்) போன்ற ரசாயனங்கள் இல்லாத R32 கூலன்ட் கொண்ட ACகள் மற்றும் r600a கூலன்ட் கொண்ட ப்ரிட்ஜ்களை பயன்படுத்தலாம். இது குறைந்தபட்சம் உங்களை சுற்றியுள்ள பகுதியில் இருந்தாவது கிரீன்ஹவுஸ் வாயு வெளியேறுவதை தடுக்க உதவும்.
6. புதிய ஸ்மார்ட்போனுக்கு புதிய சார்ஜர் வாங்க வேண்டாம்:
உங்களிடம் ஏற்கனவே இருக்கும் சார்ஜர் உடன் பொருத்தக்கூடிய வகையில் புதிய செல்போனை வாங்கலாம். பல ஸ்மார்ட்போன் கம்பெனிகள் தங்கள் தயாரிப்புகளுடன் தற்போது சார்ஜர்களை வழங்குவதில்லை. உங்களிடம் ஏற்கனவே புதிய போனுடன் சரியாகச் பொருத்தக்கூடீய சார்ஜர் இருந்தால், புதிய சார்ஜரை வாங்குவதை தவிருங்கள்.
8. ஆற்றல் திறன் கொண்ட தயாரிப்புகள்:
குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி செயல்படக்கூடிய ஆற்றல் திறனுள்ள பொருட்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் மின்சார கட்டணம் மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். குறைந்தபட்சம் 4-ஸ்டார் அல்லது 5-ஸ்டார் எனர்ஜி ரேட்டிங்குடன் வரும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
9. மாற்று ஆற்றலை பயன்படுத்துங்கள்:
சூரிய ஆற்றல் போன்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும். எடுத்துக்காட்டாக, விளக்குகள், குக்கர்கள் மற்றும் பிற உபகரணங்களை இயக்குவதற்கு சோலார் பேனல்களை வீட்டில் நிறுவலாம் அல்லது சோலார் விளக்குகள், சூரிய சக்தியில் இயங்கும் கீசர்கள் போன்ற சாதனங்களை பயன்படுத்தலாம்.