இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஆப்பிள், சாம்சங், கூகுள் மற்றும் ரெட்மி போன்ற சிறந்த ஸ்மார்ட்போன்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் சிறந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் விற்பனை உங்களுக்கான ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன், இவை 47 தர சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் கூறுகிறது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை வழங்குவதாகவும் இந்நிறுவனம் உறுதியளிக்கிறது. இனி, எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையில் உள்ளது என்பதை குறித்து பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோன் 6s : ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் எப்படியாவது ஆப்பிள் மொபைலை வாங்கி விட வேண்டும் என்கிற கனவு இருக்கும். உங்களின் கனவை எளிதில் நிறைவேற்றி கொள்ள இதோ உங்களுக்கான சூப்பர் வழியை பிளிப்கார்ட் தருகிறது. புதுப்பிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 6s ரோஸ் கோல்டு 32GB மாடல் இந்த பிளிப்கார்ட் விற்பனையில் 74% தள்ளுபடியுடன் 11,699 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த போனின் ஒரிஜினல் விலை ரூ.45,999 ஆகும். இது 12 எம்.பி பின்புற கேமரா மற்றும் 5 எம்.பி முன் கேமரா வசதியை கொண்டுள்ளது. மேலும் இதில் A9 64-பிட் செயலியுடன் 4.7 ரெட்டினா HD டிஸ்ப்ளே வசதியும் தரப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 7 : அடுத்தாக புதுப்பிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 7 கருப்பு நிறம் 128 GB மாடலை ரூ.16,999-க்கு பெற்று கொள்ளலாம். இது 63% வரை பிளிப்கார்ட் விற்பனையில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஃபோனின் பட்டியல் விலை ரூ.45,999 ஆகும். இதிலும் ஐபோன் 6 மொபைலை போன்றே ரெடினா HD டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது. ஆனால் A10 ஃபியூஷன் 64-bit செயலி இதில் வருகிறது.
சாம்சங் ஆன்5 ப்ரோ : சாம்சங் பிராண்டின் சிறந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு. புதுப்பிக்கப்பட்ட சாம்சங் ஆன் 5 ப்ரோ பிளாக் 16ஜிபி ஸ்மார்ட்போனை நீங்கள் 64% தள்ளுபடியுடன் ரூ.3,671-க்கு பெற்று கொள்ளலாம். இந்த போனின் ஒரிஜினல் விலை ரூ.9,999 ஆகும். இது 5 இன்ச் டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது. மேலும் இதில் 8MP பின்புற கேமரா, 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த மொபைல் 2600 mAh பேட்டரி வசதியையும் கொண்டுள்ளது.
ரெட்மி 6A : ரெட்மி 6A ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு 16GB மாடலை 50% வரை தள்ளுபடியுடன் பெறலாம். அதன்படி, இந்த மொபைலை நீங்கள் ரூ.3,999-க்கு பெற்று கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனின் பட்டியல் விலை ரூ.8,000 ஆகும். இதில் 3000 mAh பேட்டரி வசதியும், 13 MP பின்புற கேமரா மற்றும் 5 MP முன் கேமராவும் உள்ளன. ரெட்மி ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
கூகுள் பிக்சல் 3ஏ XL : தரமான மற்றும் சிறந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட் போன் சிறந்த ஒன்று. இதில் ஜஸ்ட் பிளாக் 64ஜிபி மாடல் ரூ.13,499-க்கு கிடைக்கிறது. அதாவது இதற்கு 71% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.48,000 ஆக இருக்கிறது. இந்த போனில் 6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே வசதி உள்ளது. மேலும் இதில் 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மட்டுமே உள்ளது. இதில் 3,700mAh பேட்டரியும் தரப்பட்டுள்ளது. இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் அமைப்பு உள்ளது.