கூகுளின் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி விற்பனை ஆவது அனைவரும் அறிந்ததே. கூகுள் பிக்சல் 7ஏ விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கூகுள் பிக்சல் 6A இப்போது மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 6ஏ-ஐ பிளிப்கார்ட்டில் ரூ.16,000 தள்ளுபடியில் பெறலாம். (படம்: கூகுள்)
கூகுள் பிக்சல் 6A ஸ்மார்ட்போன் (Specs) 60Hz அப்டேட்டுடன் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கண்ணாடி வடிவமைப்புடன் வருகிறது. கூகுளின் சொந்த டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 மெகாபிக்சல் பிரதான கேமரா + 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராக்கள் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 8 மெகாபிக்சல் ப்ரண்ட் கேமரா உள்ளது. (படம்: கூகுள்)