பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே சேல்” விற்பனையானது இன்று முதல் தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. Flipkart Plus வாடிக்கையாளர்கள் “பிக் பில்லியன் டே சேல்” ஆபர் திருவிழா ஒருநாள் முன்னதாக நேற்றே தொடங்கிவிட்டது. பிளிப்கார்ட் வழங்கும் சலுகைகளுடன் ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளின் சலுகை மற்றும் பேடிஎம் வழங்கும் கேஷ்பேக் ஆபர்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
போன் ரொம்ப பழசாகிடுச்சி, சவுண்ட், டிஸ்ப்ளே எதுவுமே சரியில்ல, ரொம்ப ஹேங் ஆகுது என அலுத்துக்கொண்டிருக்கும் நபர்கள் பிளிப்கார்ட் ஆஃபரை பயன்படுத்தி பட்ஜெட் விலையில் பிராண்ட் நியூ போன்களை அள்ளலாம். விரைவில் இந்தியாவில் 5 ஜி சேவை அறிமுகமாக உள்ளதால், பிளிப்கார்ட் ஏராளமான 5ஜி போன்கள் மீது சிறப்பு ஆஃபர்களையும் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே சேல்” முன்னிட்டு, இந்தியாவில் ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த ஃபோன்களின் பட்டியல் இதோ....
20 ஆயிரம் ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட் போன்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்காக பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. சலுகைகள் ப்ரீபெய்ட் ஆர்டர்கள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மீதான சிறப்பு தள்ளுபடி, குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு பிளாட் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் ஆபர் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடைய சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் மாடல் ரூ.24,999 விற்கப்படும் நிலையில், பிளிப்காட்டில் 19,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் (ரூ. 1,500) தள்ளுபடியும், ப்ரீபெய்டு ஆர்டர்களுக்கு 3,500 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால் பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட் போன் 19,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ் (Realme 9 Pro+) 6 ஜிபி + 128 ஜிபி மாடல், 22,999 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், பிளிப்கார்ட்டில் 18,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஸ்மார்ட் போன் மீது வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 பிளாட் தள்ளுபடியும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட்டிற்கு 10 சதவீதம் (1,500) தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப்23 (Samsung Galaxy F23) 4 ஜிபி + 128 ஜிபி மாடல், 12,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை மூலமாக 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.