முகப்பு » புகைப்பட செய்தி » தொழில்நுட்பம் » ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டர் செயலி மூலம் குரல் மற்றும் வீடியோ சாட் செய்ய கூடிய வகையில் அம்சங்களையும் சேர்க்க உள்ளதாக மஸ்க் கூறினார். இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் மிக விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 16

    ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

    கடந்த ஆண்டு, "ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்" (Twitter 2.0 The Everything App) திட்டங்கள் குறித்து தற்போதைய தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் வெளியிட்டு இருந்தார். அதில் என்கிரிப்டட் நேரடி செய்திகள் (DMs), நீண்ட வடிவ ட்வீட்கள் மற்றும் பணம் செலுத்துதல் போன்ற புதிய சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த அம்சங்கள் ட்விட்டர் பயனாளர்களுக்கு பெரிய அளவில் உதவியாகவும், அதிக பாதுகாப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

    மேலும், ட்விட்டர் செயலி மூலம் குரல் மற்றும் வீடியோ சாட் செய்ய கூடிய வகையில் அம்சங்களையும் சேர்க்க உள்ளதாக மஸ்க் கூறினார். இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் மிக விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த அம்சங்கள் மூலம் உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுக்காமல் உலகில் எங்கிருந்தாலும் ஒருவருடன் எளிதாக பேசலாம்" என்று எலான் மஸ்க் செவ்வாயன்று ஒரு ட்வீட்டில் பதிவிட்டு இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 36

    ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

    ட்விட்டரில் உள்ள அழைப்பு அம்சம் மைக்ரோ-பிளாக்கிங் தளத்தை மெட்டாவின் சமூக ஊடக பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற ஒத்த அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். என்கிரிப்டட் நேரடி செய்திகளின் வசதியானது விரைவில் ட்விட்டரில் கிடைக்கும் என்று மஸ்க் கூறினார். ஆனால் இந்த அழைப்புகள் என்கிரிப்டட் செய்யப்படுமா என்று அவர் கூறவில்லை. மேலும், ட்விட்டர் நிறுவனம் இந்த வாரம் பல ஆண்டுகளாக செயலிழந்த கணக்குகளை அகற்றி, removing and archiving மூலம் க்ளீனிங் ப்ராசஸை தொடங்குவதாக கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

    archived கணக்குகளை ட்விட்டர் பயனர்கள் எப்படி அணுக முடியும் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. எனவே, இதன் காரணமாக ட்விட்டர் தளத்தில் உள்ள பயனர்கள் தங்களின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காணலாம். இதற்கு காரணம், பல செயலற்ற கணக்குகள் அகற்றப்படும் செயல்முறை தான் என்று மஸ்க் கூறியுள்ளார். எனவே, பயனாளர்களுக்கு ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்தால் பதற்றம் அடைய வேண்டியதில்லை.

    MORE
    GALLERIES

  • 56

    ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

    ட்விட்டரின் கொள்கையின்படி, நீண்டகால செயலற்ற தன்மையால் நிரந்தரமாக அகற்றப்படுவதைத் தவிர்க்க, பயனர்கள் 30 நாட்களுக்கு ஒரு முறையாவது தங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும் என்பது விதிமுறை. எனவே, நீண்ட காலமாக பயனர்கள் தங்களது அக்கவுண்ட்டில் எந்த வித செயல்பாடும் காட்டவில்லை எனில், அந்த அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்ய வாய்ப்பு அதிகம்.

    MORE
    GALLERIES

  • 66

    ட்விட்டரில் புதிதாக அறிமுகமாகவுள்ள சூப்பர் அம்சங்கள்..! எலான் மஸ்க் அறிவிப்பு

    மேலும், புதிய அம்சங்கள் ஒரு பக்கம் ட்விட்டர் பயனர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், மறுபக்கம் பணம் கட்டி ப்ளூ டிக் வாங்கும் வசதி பலருக்கு பிடிக்காத அம்சமாகவே உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், நேஷனல் பப்ளிக் ரேடியோவின் ட்விட்டர் கணக்கை வேறொரு நிறுவனத்திற்கு மறுபரிசீலனை செய்யுமாறு மஸ்க் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES