நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதை சமாளிக்க நம்மில் பலர் AC பயன்படுத்துவோம். ஆனால், AC பயன்படுத்தினால் மின்சாரக்கட்டணம் அதிகரிக்குமே என்ற அச்சம் நம்மில் பலருக்கு இருக்கும். AC பயன்படுத்தும் போது ஒரு சில விஷயங்களை நாம் கவனித்தால், கரண்ட் பில்லை பாதியாக குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதற்கான சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
AC பயன்படுத்தாத போது முழுவதுமாக அணைக்கவும் : மின் நுகர்வு குறைக்க எளிதான வழி, தேவையில்லாத போது ஏசியை அணைப்பதாகும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் மெயின் சுவிட்ச்சை அணைக்காமல், ரிமோட்டில் மட்டும் ஆப் செய்வார்கள். இவ்வாறு செய்யும் போது, ஏசி காத்திருப்பு பயன்முறையில் இருப்பதால் இதற்கான மின்சார தேவை இருந்து கொண்டே இருக்கும். எனவே தான், ஏசியை பயன்படுத்தாத போது மெயின் சுவிட்ச்யை அணைக்கவும்.
சரியான வெப்பநிலையில் ஏசியை இயக்கவும் : பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, 24 டிகிரி மனித உடலுக்கான ஐடியல் வெப்பநிலை என கூறப்படுகிறது. இத்துடன் 1 டிகிரி அதிகரிப்பதன் மூலம், மின்சாரத்தை 6 சதவீதம் வரை சேமிக்க முடியும் என பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 16 அல்லது 18 டிகிரிக்கு பதிலாக 24 டிகிரியில் ஏசியை இயக்க முயற்சிக்கவும்.
ஏசியை தவறாமல் சர்வீஸ் செய்யுங்கள் : ஏசியின் உட்புற அல்லது வெளிப்புற யூனிட்டில் அழுக்கு குவிவது ஏசியின் செயல்திறனை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இது குளிர்ந்த காற்றைக் கொடுக்க அதிகமாக செயல்பட வேண்டி இருக்கும். இதனால், அதிக மின்சாரமம் பயன்படுத்தப்படும். இதனால், தான் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு முறையாவது ஏசி சர்வீஸ் செய்ய வேண்டும்.
ஏசியுடன் மின்விசிறியைப் பயன்படுத்துங்கள் : ஏசியை பயன்படுத்தும் போது, அதனுடன் மின்விசிறியை பயன்படுத்தினால் அறை விரைவாக குளிர்ந்து விடும். ஏனெனில், அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏசியின் குளிர்ந்த காற்றைப் பரப்புவதற்கு மின் விசிறி உதவுகிறது. எனவே, இது AC இயந்திரத்தின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். குறைவான வேகத்தில் மின் விசிறியை இயக்கினால் நல்ல பயன் தரும்
வெவ்வேறு மோடுகளை பயன்படுத்தவும் : தற்போது கிடைக்கும் AC-களில் பொருளாதாரம் மற்றும் ஸ்லீப் போன்ற பல்வேறு மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை சரியாக பயன்படுத்தினால், மின்சாரத்தை எளிமையாக சேமிக்கலாம். உங்களின் தேவைக்கு ஏற்றார் போல AC-யை பயன்படுத்தினால் மின்சாரத்தை பாதியாக குறைக்கலாம். ஏசி வாங்கும்போதே இது தொடர்பான பயன்பாடுகளை கேட்டு தெரிந்து கொள்ளவும்