ஒரு நாளின் வரையறை என்பது ஒரு வானியல் பொருள் அதன் அச்சில் ஒரு முழு சுழற்சியை முடிக்க எடுக்கும் நேரமாகும். பூமியில், ஒரு நாள் என்பது 23 மணி 56 நிமிடங்கள். ஆனால் மற்ற கிரகங்களும் மற்ற விண்கற்களும் வெவ்வேறு விகிதங்களில் சுழல்கின்றன. அதனால் அதன் நாள் கணக்கு என்பது மாறுபடும். உதாரணமாக, சந்திரன் 29.5 நாட்களுக்கு ஒருமுறை அதன் அச்சில் சுழல்கிறது.
யுரேனஸ் மற்ற கோள்களை போல கொஞ்சம் சாய்ந்து இல்லாமல் மொத்தமாக அபக்கவாட்டில் படுத்து சூரியனை சுற்றி உருளுகிறது. 17 மணி 14 நிமிடங்களுக்கு ஒருமுறை அதன் அச்சில் சுற்றுகிறது. நாளின் நீளம் மற்றும் யுரேனிய ஆண்டின் நீளம் மற்றும் விசித்திரமான அச்சு சாய்வு அனைத்தும் இணைந்து இந்த கிரகத்தில் ஒரு பருவம் போன்ற ஒரு நாளை உருவாக்குகின்றன.